VAAMANA AVATHAARAM - ( NaaraayaNeeyam-30)


  song  rendered  by  Trissur Ramachandran
( contributed  by  Sri.C.Ramakrishnan )
please listen using  the  audio  player  at  the end  of  this  page
Karaharapriya Ragam - கரஹரப்ரியா


                                                வாமன அவதாரம்
 


30-1
  பரந்த மனம் கொண்ட மகிமை மிக்க மஹாபலி  சக்கரவர்த்தி (  பக்த  பிரகலாதனின் வம்சத்தில்   உதித்தவன்), இந்திரனுடன்  நடந்த யுத்தத்தில்  உயிர் இழக்க நேர்ந்தாலும்,   அவனது  குரு சுக்ராச்சார்யரின்  சஞ்சீவினி  என்ற  சிகிச்சையால், மீண்டும் உயிர்  பெற்றான். பின்னர் ' விஸ்வஜித்'என்ற பெரும் யாகம்  செய்து,    மிகுந்த  ஆற்றல்   பெற்றான். தேவர்கள்  அனைவரும்   தோல்வியுற்று , ஒளிந்து  கொண்டனர்
.
30-2
  தேவர்களின்  தாயாராகிய அதிதி  தேவி,   இதனால்  துயருற்று தனது   கணவர்  காஷ்யபரிடம்  முறையிட்டாள்.  அவர்  அறிவுரைப்படி,
' பயோவ்ரதம்' என்ற  பூஜையை  பன்னிரண்டு  நாட்கள்  இடைவிடாது  செய்தாள் .

30-3
    அந்த விரத பூஜையின்  முடிவில்,  தங்கள்  பக்தையான அதிதிக்கு, பகவான்   மஹாவிஷ்ணு,  ஷ்யாமள    வண்ணமும்,  நான்கு திருக்கைகளும்  கொண்டு  ,  தர்சனம்  தந்து அருளினார்.   அப்போது ' நான்  உனக்கு மகனாகப் பிறந்து   உனது  மனக்குறையை நீக்குகிறேன்'    ஆனால்,   இதைப்பற்றி  நீ  யாருடனும்   கூறாமல் ரஹஸ்யம் காக்கவேண்டும் '  என்று  கூறி மறைந்தார்.

30-4
   அவ்வாறே  ஸ்ரீ   ஹரியானவர், காஸ்யபருக்கும்  அதிதிக்கும்,  புதல்வனாக அவதரித்தார். பிரமதேவர்  துதிக்க, சங்கு சக்ரம்  முதலிய தெய்வ  அம்சங்களுடன், ஒரு வளர்பிறை துவாதசியும் திருவோணமும்  கூடிய நன்னாளில்  அதிதி குழந்தையை ஈன்றெடுத்தாள். 

30-5
   தேவகணங்கள் ஆனந்தம்  பொங்க   முரசினை  முழங்கிக்கொண்டு, புண்ணியம் மிக்க அந்த ஆஸ்ரமத்தில் மலர்மாரி  பொழிந்தனர். தாயும் தந்தையும்  கைகூப்பி 'ஜய -ஜய ' என  துதிக்க ,    அதே  நொடியில், அழகு மிக்க   ப்ரம்மச்சாரியின்  வடிவெடுத்தார் ஸ்ரீ  ஹரி!

30-6
 அப்போது   தந்தை காச்யபர், அந்த  பிரம்மச்சாரிக்கு  உபநயனம் செய்து வைத்தார் புல்லால்  செய்யப்பட  மேகலை, மான் தோல் ,
 ருத்ராக்ஷ மாலை , கங்கணம் முதலியவற்றை அணிந்து கொண்டு , அக்னி  பூஜை  செய்துவிட்டு, ஒளி வீசும்   தேஹத்துடன், அந்த   வாமனர் , மஹாபலிச் சக்கரவர்த்தி,  அஸ்வமேத  யாகம் நடத்திக்  கொண்டிருந்த  இடத்திற்கு வந்து தோன்றினார்.

30-7
    விரைவில்  நிகழவிருந்த விஸ்வரூபம்  பற்றிய  முன்னோடியாக,
அவர்    நடக்கையில்,  பூமியும்  அதற்கேற்ப  அசைந்தது. பகைவர்களின்  வெம்மையை  மறைக்கும்  விதமாக  குடை அமைந்தது.  அசுரர்களைத் தண்டிக்கும் வண்ணமாக  கையில் ஒரு   கோலும்  கொண்டு அந்த வாமன மூர்த்தி  அஸ்வமேத  யாகசாலைக்கு சென்றார்.

30-8
    நர்மதை நதியின்   வடகரையில் இருந்த யாகசாலையை வாமனர்  அடைந்தபோது,  அவரது  .தேஜோமயமான தோற்றத்தைக் கண்டு,
சுக்ராச்சார்யர்  போன்றோர் ' இவர்  யாராக இருக்கும்! ஸூர்யனா? அக்னிதேவதையா? யோகி ஸநத்குமாரரா ? ' என்று   வியந்தனர்.

30-9
   பெரியவர்கள் அனைவரும், இவ்வாறு வாமனரை  வரவேற்பது கண்டு, மஹாபலி  சக்கரவர்த்தி, வாமன  மூர்த்தியின்  பாத  கமலங்களை நீர் கொண்டு   கழுவி, அந்த  நீரை  தனது   சிரசில் தெளித்துக்
கொண்டான்.

30-10
  அசுரர் குலத்தில் பிறந்தாலும்,  ஸ்ரீ  ஹரியின் ஸ்ரீபாத  தீர்த்தம் , தனது  தலையில்  பட, அந்த  மஹாபலி   என்ன தவம்  செய்திருப்பான்?  சிவபெருமான்  கூட தனது  சிரசில்   வைத்துக் கொண்டாடத்தக்க  அந்த  ஸ்ரீ பாத  தீர்த்த  பாக்கியம் ,  அவன்  பிரகலாதனின் வம்சத்தில்  வந்தவன்  என்பதாலா ?  அல்லது  வேள்விகள்  பல  செய்ததாலா? அல்லது   சிறந்த ஞானிகளுக்கு   சேவை செய்ததாலா? ..  யான் அறியேன்!
குருவாயூரப்பா , என்னைக் காத்தருள  வேண்டும்.
  
*******************************************************************.


30-1
The high souled Bali was killed in the battle by Indra, but his body was revived by Shukraachaarya. By performing the Vishwajit Sacrifice he grew in prowess and being a descendent of Prahlaad, he was not afraid of Thy discus. So Devas had to flee in fear of the victorious Bali who conquered the three worlds where the Devas had hid themselves.

30-2
Aditi was very much tormented on seeing the plight of her sons the Devas. She approached her husband Kaashyapa for help. He advised her to observe the Payovrata worship unto Thee. She performed it for twelve days with full devotion to Thee.

30-3
At the end of the worship, Thou with four arms and blue complexion appeared in front of her whose mind was fixed on Thee.There , at that moment, when she was bowing to Thee, Thou told her that Thou would be born as her son. Thou also charged her to let the meeting be a secret and then Thou disappeared.  


30-4
Then placing Thyself in Kaashyapa's austerity bourne seed, Thou entered into Aditi's womb. Praised by Brahmaa Thou were delivered as a divine child with evident marks of Vishnu's glory, on the auspicious day of the confluence of Dvaadashi and Shraavana Nakshatra. 


30-5
The Devas in great joy were showering flowers on that hermitage where Thou were born and were blowing trumpets. Thy Parents were praising Thee with folded hands, just then Thou took on the form of a talented handsome Brahmachaarin.


30-6
Kaashyapa Prajaapati and others adorned Thee with the sacred thread, staff, deer skin, and a garland of beads. O Lord! Being conferred upon, and worshipped,Thou performed the rites with the sacred fire and with Thy resplendent form departed for the house of Bali where the Ashvamedha Yanjya was being performed.  


30-7
As Thou marched forth, Thy body's weight shook the earth, indicating the subsequent manifestation of the might befitting the majesty. Thou held an umbrella as if to ward off the heat of the aggressiveness of all opponents, and carried a staff as though to apply it on the Asura people. 


30-8
Thou reached the venue of the Ashvamedha Yanjya on the northern bank of the Narmadaa river. By Thy brilliance the eyes of Shukra and others were dazzled and they wondered if it was the Sun or Agni or the Sage Sanat Kumaara, who was he?  


30-9
Bhrigu and others who were overwhelmed by Thy majestic charm received Thee quickly. The thrilled Asura Bali, with devotion, approached Thee of charming appearance. Asura Bali, who had done noble deeds, washed Thy feet and sprinkled that holiest of the holy waters on his head. 


30-10
The son of Diti, the Asura Bali, was very fortunate, by the glory of being born in the line of Prahlaad, or by having performed sacrifices,or by his faith in and service to holy men, to get this holy water from Thy feet. O Lord! This water is meant to sanctify Shiva's head. O Thou! Who resides in Guruvaayur! please protect me.
************************************************




30-1
शक्रेण संयति हतोऽपि बलिर्महात्मा
शुक्रेण जीविततनु: क्रतुवर्धितोष्मा ।
विक्रान्तिमान् भयनिलीनसुरां त्रिलोकीं
चक्रे वशे स तव चक्रमुखादभीत: ॥१॥


30-2
पुत्रार्तिदर्शनवशाददितिर्विषण्णा
तं काश्यपं निजपतिं शरणं प्रपन्ना ।
त्वत्पूजनं तदुदितं हि पयोव्रताख्यं
सा द्वादशाहमचरत्त्वयि भक्तिपूर्णा ॥२॥


30-3
तस्यावधौ त्वयि निलीनमतेरमुष्या:
श्यामश्चतुर्भुजवपु: स्वयमाविरासी: ।
नम्रां च तामिह भवत्तनयो भवेयं
गोप्यं मदीक्षणमिति प्रलपन्नयासी: ॥३॥



30-4
त्वं काश्यपे तपसि सन्निदधत्तदानीं
प्राप्तोऽसि गर्भमदिते: प्रणुतो विधात्रा ।
प्रासूत च प्रकटवैष्णवदिव्यरूपं
सा द्वादशीश्रवणपुण्यदिने भवन्तं ॥४॥



30-5
पुण्याश्रमं तमभिवर्षति पुष्पवर्षै-
र्हर्षाकुले सुरगणे कृततूर्यघोषे ।
बध्वाऽञ्जलिं जय जयेति नुत: पितृभ्यां
त्वं तत्क्षणे पटुतमं वटुरूपमाधा: ॥५॥ 



30-6
तावत्प्रजापतिमुखैरुपनीय मौञ्जी-
दण्डाजिनाक्षवलयादिभिरर्च्यमान: ।
देदीप्यमानवपुरीश कृताग्निकार्य-
स्त्वं प्रास्थिथा बलिगृहं प्रकृताश्वमेधम् ॥६॥



30-7
गात्रेण भाविमहिमोचितगौरवं प्रा-
ग्व्यावृण्वतेव धरणीं चलयन्नायासी: ।
छत्रं परोष्मतिरणार्थमिवादधानो
दण्डं च दानवजनेष्विव सन्निधातुम् ॥७॥



30-8
तां नर्मदोत्तरतटे हयमेधशाला-
मासेदुषि त्वयि रुचा तव रुद्धनेत्रै: ।
भास्वान् किमेष दहनो नु सनत्कुमारो
योगी नु कोऽयमिति शुक्रमुखैश्शशङ्के ॥८॥



30-9
आनीतमाशु भृगुभिर्महसाऽभिभूतै-
स्त्वां रम्यरूपमसुर: पुलकावृताङ्ग: ।
भक्त्या समेत्य सुकृती परिणिज्य पादौ
तत्तोयमन्वधृत मूर्धनि तीर्थतीर्थम् ॥९॥





30-10
प्रह्लादवंशजतया क्रतुभिर्द्विजेषु
विश्वासतो नु तदिदं दितिजोऽपि लेभे ।
यत्ते पदाम्बु गिरिशस्य शिरोभिलाल्यं
स त्वं
विभो गुरुपुरालय पालयेथा: ॥१०॥        



audioplayer