BOOTHANAI VADHAM
rendition byThrisoor Ramachandran
Ragam PanthuvaraLi ( பந்துவராளி )
( mp3 contributed by C.Ramakrishnan
please listen using the audio player at the end of this page
audioplayer
rendition byThrisoor Ramachandran
Ragam PanthuvaraLi ( பந்துவராளி )
( mp3 contributed by C.Ramakrishnan
please listen using the audio player at the end of this page
40-1
அதன்பின் அனைத்துச் செல்வங்களும் நிரம்பப் பெற்ற நந்தகோபன்
அரசனுக்குக் கப்பம் "கட்ட வேண்டி மதுரையம்பதி .செல்ல, கம்ஸனுக்கு உதவி புரியும் மந்திரிகளின்
தீய முயற்சியை நன்கு அறிந்த தங்கள் தந்தையான வஸுதேவர் அவரிடம்
(பின்வருமாறு) கூறினார். (1)
40-2
"நண்பனே! உனக்குப் பிள்ளைப்பேறு
கிடைத்தது எனக்கே பேறு கிடைத்தது போல் என் மனம் மகிழ்கிறது' என்று யதுகுலத் தலைவ்ரான நந்தனின்
மேல் 'தங்களுக்குத்
தந்ைத' என்கிற புகழை
ஏற்றி வைத்து மிக்க அன்புடன் அவரைப் புகழ்ந்தார். (2)
40-3
'நண்பனே! இப்பொழுது தங்களுடைய
கோகுலத்தில் நூற்றுக்கணக்கான தீய சகுனங்கள் காணப்படுகின்றன. ஆகவே விரைவில் திரும்பிச் செல்லுங்கள்' என்று வஸுதேவர் சொல்லக் கேட்ட நந்தன், தங்களுக்குத் தீங்கு நேரிடுமோ என்ற
அச்சத்தால் விரைவில் (கோகுலம்) திரும்பி
வந்தார். (3)
40-4
மாயக்குழந்தை வேடம் பூண்ட குருவாயூரப்பா! அப்பொழுது
இங்குமங்கும் அசையும் -வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய அழகிய வடிவுடைய ஒரு பெண்
கோகுலத்தில் தங்கள்
அருகில்
வந்தாள். (4)
40-5
குழந்தைகளின் உயிரைப் பறிப்பவளும், அரக்கர் குலத்தில் பிறந்தவளும், பூதனை என்ற பெயர் கொண்டவளுமான அப்பெண்ணைக் கண்ட இடைச்சியர்கள் 'இவள் யார்?” என்று ஆராய்ந்திருக்கையில், அவள் தங்களைத் கையில் எடுத்துக்
கொண்டாள். (5)
40-6
“தனது' அழகிய நடையுடை பாவனைகளால் ஆய்ச்சியர்
மனதைக் கவர்ந்த பூதனை, எவராலும் தடுக்கப்படாமல் வீட்டினுள் புகுந்து (ஓரிடத்தில்)
அமர்ந்து கொண்டு கபட உரு தாங்கி வந்த தங்களுக்கு நகில்களால் பால் கொடுத்தாள். (6)
40-7
இவள் குழந்தைகளைக் கொல்வது அறிந்து மிக்க சினங்கொண்ட தாங்கள்
சிறிதும் அச்சமின்றி அவளது மடியில் ஏநியமர்ந்து கொடிய நஞ்சு நிரம்பிய
அவளுடைய மார்பகத்தைப் பெரிய மாம்பழத்தை உறிஞ்சிச்
சாப்பிடுவதுபோல உறிஞ்சிக் குடித்தீர்கள். (7)
40-8
தாங்கள் முலையுண்ணுகையில் அவளது உயிரையும் சேர்த்துப்
பருகினதால் அப்பூதனை இடி. போன்ற பேரொலியுடன் அச்சம் தரும் தனது உண்மையான அரக்க
வடிவம் கொண்டு தனது இருகைகளையம் விரித்தவாறு ' மல்லாந்து விழுந்து இறந்தாள். (8)
40-9
இடைச்சேரியில் அச்சம் தரும்: குரலைக் கேட்டும், பயங்கரமான அஸுர உடலைப் பார்த்தும் கோபியர்கள் மயங்கியபொழுது தாங்கள் அப்பூதனையின்
மார்பகத்தில் விளையாடிக் கொண்டிருந்தீர்கள். உடனே ஆய்ச்சியர்
ஓடி வந்து தங்களை எடுத்துக் கொண்டார்கள்
அல்லவா? (9)
40-10
அனைத்துலகங்களுக்கும் எல்லா நலன்களும் அருளும்
குருவாயூரப்பா! தங்களுடைய மங்களமான திருநாமங்களை ஓதியே பெண்மணிகள் அனைவரும்
தங்களுக்குப் பல வகையிலும் காப்பு செய்தார்கள். அத்தகைய : தாங்கள் தங்கள் அடிமையாகிய என்னை
நோயற்றவனாகச் செய்தருள வேண்டும். 10
---------------------------------------------------------
40-1
तदनु नन्दममन्दशुभास्पदं नृपपुरीं करदानकृते गतम्।
समवलोक्य जगाद भवत्पिता विदितकंससहायजनोद्यम: ॥१॥
समवलोक्य जगाद भवत्पिता विदितकंससहायजनोद्यम: ॥१॥
Thereafter, Nanda (who is the abode of undiminished virtues), went to
the king's city to pay his tributes (taxes). On meeting him, Thy father
Vasudeva who knew of the activities of Kansa and his supporters, told
him that.
------------------------------------------------------------
अयि सखे तव बालकजन्म मां सुखयतेऽद्य निजात्मजजन्मवत् ।
इति भवत्पितृतां व्रजनायके समधिरोप्य शशंस तमादरात् ॥२॥
इति भवत्पितृतां व्रजनायके समधिरोप्य शशंस तमादरात् ॥२॥
"O Friend! The birth of a son to you gives me pleasure as if a son were
born to myself." Thus he cleverly attributed Thy fatherhood on Nanda,
and praised him with affection.
------------------------------------------------------------
इह च सन्त्यनिमित्तशतानि ते कटकसीम्नि ततो लघु गम्यताम् ।
इति च तद्वचसा व्रजनायको भवदपायभिया द्रुतमाययौ ॥३॥
इति च तद्वचसा व्रजनायको भवदपायभिया द्रुतमाययौ ॥३॥
"Here there are bad omens in hundreds and soon at your residence also it
will not be safe, so you should return soon". Thus by Vasudeva's words,
apprehending danger to Thee, Nanda quickly returned.
---------------------------------------------------------
अवसरे खलु तत्र च काचन व्रजपदे मधुराकृतिरङ्गना ।
तरलषट्पदलालितकुन्तला कपटपोतक ते निकटं गता ॥४॥
तरलषट्पदलालितकुन्तला कपटपोतक ते निकटं गता ॥४॥
Just then there in Gokula, some beautiful looking woman with honey bees
hovering around the sweet smelling flowers in her hair locks, entered. O
Thou! In the guise of a child, she approached Thee.
--------------------------------------------------------
सपदि सा हृतबालकचेतना निशिचरान्वयजा किल पूतना ।
व्रजवधूष्विह केयमिति क्षणं विमृशतीषु भवन्तमुपाददे ॥५॥
व्रजवधूष्विह केयमिति क्षणं विमृशतीषु भवन्तमुपाददे ॥५॥
Quickly she, Pootanaa, born in the clan of demons, who had taken the
lives of many children, lifted Thee up, even as the Vraja women were for
a second wondering as to who she was.
----------------------------------------------------------
ललितभावविलासहृतात्मभिर्युवतिभि: प्रतिरोद्धुमपारिता ।
स्तनमसौ भवनान्तनिषेदुषी प्रददुषी भवते कपटात्मने ॥५॥
स्तनमसौ भवनान्तनिषेदुषी प्रददुषी भवते कपटात्मने ॥५॥
Her charming appearance and graceful movements captivated the minds of
the Gopis who were unable to stop her from making advances. So this
Pootanaa took her seat inside the house as she applied Thee, the
illusive child, to her breasts.
----------------------------------------------------------------
समधिरुह्य तदङ्कमशङ्कितस्त्वमथ बालकलोपनरोषित: ।
महदिवाम्रफलं कुचमण्डलं प्रतिचुचूषिथ दुर्विषदूषितम् ॥७॥
महदिवाम्रफलं कुचमण्डलं प्रतिचुचूषिथ दुर्विषदूषितम् ॥७॥
Thou who were angered by her killing of the children, unhesitatingly
climbed in her lap and sucked well her poison smeared breasts as if it
were a huge mango fruit
-------------------------------------------------------------------
असुभिरेव समं धयति त्वयि स्तनमसौ स्तनितोपमनिस्वना ।
निरपतद्भयदायि निजं वपु: प्रतिगता प्रविसार्य भुजावुभौ ॥८॥
निरपतद्भयदायि निजं वपु: प्रतिगता प्रविसार्य भुजावुभौ ॥८॥
Thou sucked the breast along with her life force. This Pootanaa fell
down with a thunder like noise reverting to her natural ferocious body
with both hands stretching out
--------------------------------------------------------------------
भयदघोषणभीषणविग्रहश्रवणदर्शनमोहितवल्लवे ।
व्रजपदे तदुर:स्थलखेलनं ननु भवन्तमगृह्णत गोपिका: ।।९॥
व्रजपदे तदुर:स्थलखेलनं ननु भवन्तमगृह्णत गोपिका: ।।९॥
The whole of Gokul stood stunned hearing the terrifying sound and seeing
the frightful form. The Gopis picked Thee up even as Thou were playing
on the chest of the dead demoness.
---------------------------------------------------------------------
भुवनमङ्गलनामभिरेव ते युवतिभिर्बहुधा कृतरक्षण: ।
त्वमयि वातनिकेतननाथ मामगदयन् कुरु तावकसेवकम् ॥१०॥
त्वमयि वातनिकेतननाथ मामगदयन् कुरु तावकसेवकम् ॥१०॥
O Thou! Who confers auspiciousness on to the world, the young women
protected Thee in various ways with chanting Thy names alone. O Lord of
Guruvaayur! Making me devoid of my ailments, make me Thy devotee.
=======================================================
audioplayer