NARA-SIMHA AVATHAARAM ( NaaraayaNeeyanm- 25 th)



(mp3   Contributed  by Sri. C. Ramakrishnan )
KAMBODHI  RAGAM
                                                               காம்போதி   

-------------------------------------------------------------------
------------


         நரசிம்ம அவதாரம்
25-1
  ஹிரண்யகசிபு தூணை  ஓங்கி அடித்ததும் ,அதனுள் இருந்து கிளம்பிய தங்களுடைய சிம்மநாதம் , அவனது காதுகளை பிளப்பது  போலவும், அண்ட சராசரங்கள்  அனைத்தையும்  கலங்கச் செய்வதாகவும் ,   மிகவும் அச்சம் கொடுப்பதாகவும்  இருந்தது.   அந்த  அசுரர் மன்னன்  மனதில் பெரும் நடுக்கம் உண்டானது.  என்னே  வியப்பு!பிரம்மதேவரும் கூட, தனது இருக்கையில் ஆட்டம் கண்டார். 

25-2
   நடுக்கம் கூடிய  கோபத்துடன் அந்த   அசுரன் தன்னைச் சுற்றி  பார்த்தபோது, அந்த   தூணிலிருந்து , ஸ்ரீ   ஹரியின் உருவம்  வெளிப்பட்டது!
வழக்கமான மனோகர ரூபம்   அல்ல! அதி  பயங்கரமான  வினோத உருவம் !
பயங்கரமான பிடரி ரோமத்துடன், ஒரு  சிம்மத்தின்  தலையும், மனித  உடலும்  கொண்ட ஒரு  ஆக்ரோஷ  ரூபம்  ,  வினாடிக்கு  வினாடி  வளர்ந்து    காண்பவர் கண் கூசும்   தேஜோமயமாக , அந்த  உருவம் நின்றது.

25-3
   உருக்கிய பொன் போன்ற மேனி! சுழன்று அச்சம்  தரும்  கண்கள்.  இங்கும் அங்கும்   அசைவதால்,ஆகாயத்தையே   மறைக்கும் பிடரி  ரோமம், விரிந்து  அகன்று  ஒரு  குகை  போன்று   தோன்றும்  பிளந்த வாய். ,  ஒரு   வாளிணைப்போல  சுழலும்  அச்சமூட்டும் நாக்கு ,  மிகப்பெரிய இரண்டு  தெற்றிப் பற்கள், இவ்வாறல்லவா ஸ்ரீ  ஹரியான தாங்கள்  அப்போது  தோன்றினீர்கள்! 

25-4
  கர்ஜனை செய்யும்போது மேலெழும் மடிப்புக் கோடுகளால்,  பயங்கரமாக விளங்கும்  கன்னங்கள்,  பருத்தும் குறுகியும்  விளங்கிய  கழுத்து, எங்கும் பரவிய  நகங்களின் ஒளி  மிகுந்து, எதிரிகளை   நடுங்க   விரட்டும்    அநேகம் கரங்கள் ,  இடி போன்ற  கர்ஜனை  ,  இவ்வளவும்  கொண்ட  ஸ்ரீ  ஹரியின்   நரசிம்ம  ஸ்வரூபத்தை  நமஸ்கரிக்கிறேன்.

25-5
 '   இவன் நிச்சயமாக விஷ்ணுதான். இவனை இப்போதே  கொல்வேன் ' என்று தனது   கதாயுதத்தை சுழற்றிக் கொண்டு,   தங்களை நோக்கிப்  பாய்ந்த அந்த  அசுரனை ,தங்களது  மிகப் பெரும்  கைகளால்  பிடித்துக்   கொண்டீர்கள்.   ஆனால்,  அந்த  அசுரன்  தங்கள்  பிடியிலிருந்து    நழுவி, வாளும்    கேடயமும் கொண்டு   மீண்டும் தங்களை  நோக்கிப்  பாய்ந்து  வந்தான்.

25-6
 சுற்றிச்  சுற்றி சுழன்று  வந்த அந்த   அசுரப்பதர் ஹிரண்யகசிபுவை ,தாங்கள்  மறுபடியும் வேகமாக கைகளில்  பிடித்துக்கொண்டு , அரச மண்டபத்தின் வாயில்  படியில் அமர்ந்து கொண்டு, அவனுடைய   மார்பில் தங்களுடைய   நீண்ட  நகங்களை  பாய்ச்சி, அவனது  உடலைக் கிழித்து அவனது  உதரத்திலிருந்து  பாய்ந்து  வந்த  உதிர வெள்ளத்தை , மிகுந்த   உற்சாக  வெறியுடன் மீண்டும் மீண்டும்  பருகி ,  அனைத்து  உலகமும்  நடுநடுங்க சிம்ம  கர்ஜனை   செய்தார் ஸ்ரீ  ஹரி!

25-7
    அசுரனின்  குருதி   வெள்ளத்தால், நனைந்த   உடலுடன், நரசிம்ம  மூர்த்தி, அந்த  அசுரனின்   உடலைத் தூக்கி   எறிந்துவிட்டு , கோபம்  தீராமல்  ,அனைத்து  அசுர  கூட்டங்களையும்   கடித்து ரணமாக்கத்  தொடங்கினீர்கள். அப்போது  பூமி   சுழன்றது. கடல்கள் கலங்கின.  மலைகள் .நிலை குலைந்தன   வானத்தில் தாரகைகள் சிதறி விழுந்தன.  பிரபஞ்சம்  முழுவதும் ஆட்டம்   கண்டது.

25-8
 அப்போது   செத்து  ஒழிந்த அசுரர்களின் மாமிசத்தாலும்,  ருணத்தாலும்  பூசப்பட்ட தங்களுடைய  திருமேனி  மிகவும்  அச்சம்  விளைவிப்பதாக  விளங்கியது. அரச மண்டபத்தின் நடுவில்  எவராலும் நெருங்க முடியாத  அளவில் தங்களது, கோப ஆவேச வெறியாட்டம் இருந்தது.  தங்களை   நெருங்குவதற்கு  எவருக்கும்  ஆற்றலோ தைர்யமோ   இல்லை!  பரமசிவன், பிரமதேவன்,  இந்திரன் எல்லோருமே  வெகு  தொலைவில்  நின்று கொண்டு, தங்களை  சாந்தமடைய கைகூப்பி  வேண்டினர்

25-9
  அப்போதும் சினம்  தணியாமல் இருந்ததால், பிரம தேவன்  கூறியபடி பாலன்  பிரஹலாதன் சற்றும்  அச்சமின்றி  தங்களை   அணுகி தங்கள்  திருவடிகளை   வணங்கினான். தாங்கள், அந்த   க்ஷணத்தில், கோபம் தணிந்து, கருணை கொண்டு, பிரகலாதனின்  சிரசில்  தங்களது   கரத்தை  வைத்து   அன்பும்,  கருணையும், ததும்ப   அவனை  ஆசீர்வதித்தீர்கள்.

25-10
 இவ்வாறு   அசுரர்களுக்கு  முடிவு கட்ட , நரசிம்ம  அவதாரம் செய்து  , தங்களது   பரம  பக்தனான பிரகலாதனுக்கு  அருள்   செய்த ஸ்ரீ  ஹரி  , குருவாயூரப்பா !  உனக்கு யார்தான்  நிகராக முடியும்! என்னைக்   காத்தருள்வாய்.
-------------------
(  profuse  thanks  to  the  creators  of absolutely  wonderful  website  at
25-1
As Hiranyakashipu struck at the pillar, he heard a terrific sound which split his ears.Thy roar was so fierce that it made everything inside the vessel of Brahmaanda tremble. Hearing this sound which was never heard before, the Asura king felt an awesome and incredible shiver within. Even the lotus born Brahmaa was shaken from his throne

25-2
As the Asura cast his eyes all around in great confused excitement, from the pillar emerged, O Lord! Thy form which was neither of a beast nor of a human being. While the Asura in an agitated state of mind wondered as to what this terrific wondrous being might be, Thou expanded into a form with a shining body on which sharp hair was bristling.  

25-3
O Hail unto that form of Thine with fierce rolling eyes shining like molten gold, with quivering mane overcastting the skies, with a wide open cave like mouth, with a sword like huge tongue lolling out, revealing a pair of huge extremely fierce molars. 

25-4
I salute Thy Man-Lion form with chin rendered forbidding due to the folds of the skin drawn upwards (while roaring), with a short stout neck, with a hundred powerful arms projecting ferocious lustrous claws, with a terrific burst of roaring voice, resounding the skies and driving away the hosts of rivals in fright.  


25-5
The Asura king rushed towards Thee, whirling a formidable mace and saying that this must be Vishnu and that he would kill him. He was caught hold of by Thy two stout arms. The mighty Asura slipped out from Thy clutches. Then grabbing a sword and shield, he displayed astonishing feats of swordsmanship and rushed towards Thee, who were in a mood to swallow all the worlds. O what a wonder! 

25-6
Catching hold of the wicked Asura quickly with two hands, who was circling around, Thou threw him flat on Thy lap in the doorway, deeply embedded Thy nails in his chest and tore it open. Thou then with great glee drank again and again the blood that gushed out of the Asura's body,fiercely roaring with lion roars which were powerful enough to shatter the whole universe.  

25-7
Abandoning the dead Asura, Thou sprang up hastily with Thy gigantic body bathed in blood and started eating up the entire host of Asuras. O What a wonder! All the worlds whirled, the oceans got turbulent, the mountains trembled, the stars and celestial luminaries and all animate and inanimate things got scattered. A state of total and unbearable chaos took over. 

25-8
Thou sat in the assemblage roaring again and again in great wrath with Thy body forbiddingly terrific being smeared with flesh and fat and garlanded by the intestines (of Hiranyakashipu). Overwhelmed with awe no one dared to approach Thee, and stood far away. Even Shiva, Brahmaa, Indra and others kept at a distance, singing Thy praises individually (and tried to pacify Thee).  

25-9
Even then, when Thou were still in a state of unabated rage, by Brahmaa's instruction the boy Prahlaad free of fear prostrated at Thy feet. Thou calmed down being overcome by love and compassion and placed Thy hand on Prahlaad's head. He burst into a hymn in praise of Thee and unasked for received a boon from Thee which was for the benefit of the whole world


25-10
In this way Thou enacted a drama of ferocity. O All Pervading Lord! As described in the Shruti named Taapaneeya, as per the hymns of Thy excellences sung therein,Thou are absolutely pure and free from anger. Thou who are thus, superseding everything else, O Lord! who can overcome Thee? O Thou who are fond of Prahlaad! O Lord of Guruvaayur! be pleased to cure me of all my ailments. 





---------------
स्तंभे घट्टयतो हिरण्यकशिपो: कर्णौ समाचूर्णय-
न्नाघूर्णज्जगदण्डकुण्डकुहरो घोरस्तवाभूद्रव: ।
श्रुत्वा यं किल दैत्यराजहृदये पूर्वं कदाप्यश्रुतं
कम्प: कश्चन संपपात चलितोऽप्यम्भोजभूर्विष्टरात् ॥१॥

25-2
दैत्ये दिक्षु विसृष्टचक्षुषि महासंरम्भिणि स्तम्भत:
सम्भूतं न मृगात्मकं न मनुजाकारं वपुस्ते विभो ।
किं किं भीषणमेतदद्भुतमिति व्युद्भ्रान्तचित्तेऽसुरे
विस्फूर्ज्जद्धवलोग्ररोमविकसद्वर्ष्मा समाजृम्भथा: ॥२॥

25-3
तप्तस्वर्ण सवर्णघूर्णदतिरूक्षाक्षं सटाकेसर-
प्रोत्कम्पप्रनिकुम्बितांबरमहो जीयात्तवेदं वपु: ।
व्यात्तव्याप्तमहादरीसखमुखं खड्गोग्रवल्गन्महा-
जिह्वानिर्गमदृश्यमानसुमहादंष्ट्रायुगोड्डामरम् ॥३॥

25-4
उत्सर्पद्वलिभङ्गभीषणहनु ह्रस्वस्थवीयस्तर-
ग्रीवं पीवरदोश्शतोद्गतनखक्रूरांशुदूरोल्बणम् ।
व्योमोल्लङ्घि घनाघनोपमघनप्रध्वाननिर्धावित-
स्पर्धालुप्रकरं नमामि भवतस्तन्नारसिंहं वपु: ॥४॥

25-5
नूनं विष्णुरयं निहन्म्यमुमिति भ्राम्यद्गदाभीषणं
दैत्येन्द्रं समुपाद्रवन्तमधृथा दोर्भ्यां पृथुभ्याममुम् ।
वीरो निर्गलितोऽथ खड्गफलकौ गृह्णन्विचित्रश्रमान्
व्यावृण्वन् पुनरापपात भुवनग्रासोद्यतं त्वामहो ॥५॥


25-6
भ्राम्यन्तं दितिजाधमं पुनरपि प्रोद्गृह्य दोर्भ्यां जवात्
द्वारेऽथोरुयुगे निपात्य नखरान् व्युत्खाय वक्षोभुवि ।
निर्भिन्दन्नधिगर्भनिर्भरगलद्रक्ताम्बु बद्धोत्सवं
पायं पायमुदैरयो बहु जगत्संहारिसिंहारवान् ॥६॥


25-7
त्यक्त्वा तं हतमाशु रक्तलहरीसिक्तोन्नमद्वर्ष्मणि
प्रत्युत्पत्य समस्तदैत्यपटलीं चाखाद्यमाने त्वयि ।
भ्राम्यद्भूमि विकम्पिताम्बुधिकुलं व्यालोलशैलोत्करं
प्रोत्सर्पत्खचरं चराचरमहो दु:स्थामवस्थां दधौ ॥७॥


25-8
तावन्मांसवपाकरालवपुषं घोरान्त्रमालाधरं
त्वां मध्येसभमिद्धकोपमुषितं दुर्वारगुर्वारवम् ।
अभ्येतुं न शशाक कोपि भुवने दूरे स्थिता भीरव:
सर्वे शर्वविरिञ्चवासवमुखा: प्रत्येकमस्तोषत ॥८॥


25-9
भूयोऽप्यक्षतरोषधाम्नि भवति ब्रह्माज्ञया बालके
प्रह्लादे पदयोर्नमत्यपभये कारुण्यभाराकुल: ।
शान्तस्त्वं करमस्य मूर्ध्नि समधा: स्तोत्रैरथोद्गायत-
स्तस्याकामधियोऽपि तेनिथ वरं लोकाय चानुग्रहम् ॥९॥


25-10 
एवं नाटितरौद्रचेष्टित विभो श्रीतापनीयाभिध-
श्रुत्यन्तस्फ़ुटगीतसर्वमहिमन्नत्यन्तशुद्धाकृते ।
तत्तादृङ्निखिलोत्तरं पुनरहो कस्त्वां परो लङ्घयेत्
प्रह्लादप्रिय हे मरुत्पुरपते सर्वामयात्पाहि माम् ॥१०॥ 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
     


  

 











audioplayer