VANABOJANAM ( episode-51)

song  rendered  by  Trisoor  Ramachandran
RAGAM SRIRANJANI
ராகம் ஸ்ரீரஞ்சனி 
mp3  contributed  by  C.Ramakrishnan ( C.Rama  of  rasikas.org)

please  listen  using  the  mp3  player  at  the end of  the  page 
-----------------------------------------------------------------


இறைவனே! தாங்கள் ஒரு சமயம் கோகுலச் சிறுவர்களுடன் வனபோஜனம் செய்ய மனங்கொண்டு அதிகாலையில் கன்றுகள் சூழ கையில் கட்டுச்சாதமும், ஊறுகாயும் எடுத்துக் கொண்டு வனம் சென்றீர்கள்.


தாங்கள் வெளியே புறப்படுகையில் தங்களது திருவடித் தாமரைகளிலிருந்து மேலே கிளம்பிய, உலகம் யாவையும் தூய்மையாக்கும் தூளிகளைத் தங்களைக் காண வந்த மஹரிஷிகள் தங்கள் உடலில் மெய்சிலிர்க்கத் தரித்துக் கொண்டனர். 


தாங்கள் இடைச்சிறுவர்களுடன் பசும்புல் தரையில் கன்றுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் அகாஸுரன் என்பான் தங்களுக்குத் தீங்கிழைப்பதற்காகவே மிக்க பயங்கரமான மலைப்பாம்பு உருக்கொண்டு திடீரென வழியை மறைத்துக் கிடந்தான். (3

தாங்கள் சற்று தூரத்திலிருக்கையில் காட்டினில் விளையாடுகின்ற இடைச்சிறுவர்கள் அந்த மலைப்பாம்பை ஒரு மலை என்றும், அதன் திறந்த வாயை குகை என்றும் எண்ணி அதன் வாயினுள் புகுந்தனர். 


பிரபுவே! கோபச் சிறுவர்கள் அறிவின்றி கன்றுகளோடு அம்மலைப்பாம்பின் வாயினுள் புகும்பொழுதே உடல்கள் வெந்து துன்பமடைந்தனர். இதைக் கண்ணுற்ற தாங்கள் வேறு புகலறியாத தோழர்களைக் காக்க விரைந்து பாம்பின் வாயினுள் நுழைந்தீர்கள்.

அப்படிச் சென்ற தாங்கள் அதன் கழுத்தின் நடுவில் தங்களது உருவத்தைப் பெரிதாக்கிக் கொள்ளவே மூச்சுவிட முடியாமல் அப்பாம்பு திணறித் தரையில் விழுந்து புரண்டு இறந்தது. உடனே தாங்கள் அதன் கழுத்தைக் கிழித்துக் கொண்டு இடைச்சிறுவர்களையும், கன்றுகளையும் துன்பத்திலிருந்து விடுவித்து வெளியே அழைத்து வந்தீர்கள்
இறந்த அக்கொடிய அஸுரனின் உடலிலிருந்து பெரியதொரு ஒளிப்பிழம்பு கிளம்பி தாங்கள் வெளிவருவதற்காக வானில் சிறிது நேரம் காத்திருந்து தாங்கள் வெளியே வந்ததும், தங்களிடம் கலந்து மறைந்தது. அப்பொழுது விண்ணில் விண்ணவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்த னர்
(7



பிறகு தாங்கள் தோழர்களான இடைச்சிறுவர்களுடன் நடுப்பகலில் வனபோஜனத்தைக் கொண்டாடினீர்கள். இதை பிரம்மா முதலிய தேவர்கள் ஆகாயத்தில் மறைந்து நின்று கவனித்தார்கள்



கொம்பையும், குழலையும் இடுப்பில் செருகிக் கொண்டு தாமரை போன்ற கைகளில் அன்னக் கவளத்தை எடுத்துக் கொண்டு இடைச்சிறுவர்களைத் தங்களது வேடிக்கைப் பேச்சுக்களால் சிரிக்கச் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு உண்டு களித்தீர்கள். இதைக் கண்ட தேவர்கள் மகிழ்ச்சி பொங்கத் தங்களைத் துதித்தனர். 



'இந்நிலவுலகில் இடையர் கூட்டத்தில் இன்பமாய் புசிப்பது, யாகத்தில் அளிக்கப்படும் அவி உணவைத் தேவருலகில் புசிப்பதைவிட மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது போலும்!' என்று வானவர்களனைவரும் தங்களைப் போற்றித் துதித்தனர்




---------------------------------------------------------------------

कदाचन व्रजशिशुभि: समं भवान्
वनाशने विहितमति: प्रगेतराम् ।
समावृतो बहुतरवत्समण्डलै:
सतेमनैर्निरगमदीश जेमनै: ॥१॥


Once Thou decided to have a picnic in the woods. Along with the children of Gokul and surrounded by a large herd of calves, Thou set out early in the morning. O Lord Thou also took along eatables, cooked rice and other delicacies.
-----------------------------------------------------------------
विनिर्यतस्तव चरणाम्बुजद्वया-
दुदञ्चितं त्रिभुवनपावनं रज: ।
महर्षय: पुलकधरै: कलेबरै-
रुदूहिरे धृतभवदीक्षणोत्सवा: ॥२॥


When Thou set out for the woods, from Thy lotus like two feet the dust arose which sanctifies the three worlds. The great sages received that dust on their bodies with great joy and horripilation as they feasted their eyes on Thy sight. 
---------------------------------------------------------------------- 
प्रचारयत्यविरलशाद्वले तले
पशून् विभो भवति समं कुमारकै: ।
अघासुरो न्यरुणदघाय वर्तनी
भयानक: सपदि शयानकाकृति: ॥३॥

Thou and the lads were grazing the cattle on the thick grass lands. Suddenly the most terrifying demon Aghaasura, in the form of a formidable python, with an evil intention blocked the way. 
------------------------------------------------------------------------
महाचलप्रतिमतनोर्गुहानिभ-
प्रसारितप्रथितमुखस्य कानने ।
मुखोदरं विहरणकौतुकाद्गता:
कुमारका: किमपि विदूरगे त्वयि ॥४॥

Thou had gone a little ahead. The lads mistook the huge body of the Asura for a mountain and its large spread out mouth for a cave. In their eagerness to explore the woods, they entered the python's open mouth. 
-------------------------------------------------
प्रमादत: प्रविशति पन्नगोदरं
क्वथत्तनौ पशुपकुले सवात्सके ।
विदन्निदं त्वमपि विवेशिथ प्रभो
सुहृज्जनं विशरणमाशु रक्षितुम् ॥५॥

The Gopa boys along with the calves had entered the belly of the snake by mistake and started to feel the heat therein. O Lord! Apprehending the situation, Thou also entered immediately to save the helpless friends.
-----------------------------------------------------
गलोदरे विपुलितवर्ष्मणा त्वया
महोरगे लुठति निरुद्धमारुते ।
द्रुतं भवान् विदलितकण्ठमण्डलो
विमोचयन् पशुपपशून् विनिर्ययौ ॥६॥


n the cavity of the throat of the python, Thou increased Thy size of Thy body, thus obstructing its breath. It began to wreath in agony, then Thou tore open its neck portion and releasing the Gopa boys and the calves, Thou also came out.  

----------------------------------------------

क्षणं दिवि त्वदुपगमार्थमास्थितं
महासुरप्रभवमहो महो महत् ।
विनिर्गते त्वयि तु निलीनमञ्जसा
नभ:स्थले ननृतुरथो जगु: सुरा: ॥७॥

A great brilliance emerged from the Asura and rose, in the sky and awaited Thy emerging from the body of the python. Oh! What a wonder, as soon as Thou came out the brilliance merged into Thee, while the gods danced and sang.  
-----------------------------------------------------

सविस्मयै: कमलभवादिभि: सुरै-
रनुद्रुतस्तदनु गत: कुमारकै: ।
दिने पुनस्तरुणदशामुपेयुषि
स्वकैर्भवानतनुत भोजनोत्सवम् ॥८॥

Brahmaa and other gods were wonderstruck and watched Thee and followed Thee in the skies. After that Thou went with the Gopa boys when the day had reached noontime and with Thy own people Thou celebrated the food festival, the picnic lunch
---------
विषाणिकामपि मुरलीं नितम्बके
निवेशयन् कबलधर: कराम्बुजे ।
प्रहासयन् कलवचनै: कुमारकान्
बुभोजिथ त्रिदशगणैर्मुदा नुत: ॥९॥

The horn and the flute were tucked in Thy waist band. Thou were holding a ball of rice in Thy lotus like hand and provoked peals of laughter among the boys by Thy humorous talks. As Thou took Thy meal the gods joyfully sang Thy praises
-----------------------------------------
सुखाशनं त्विह तव गोपमण्डले
मखाशनात् प्रियमिव देवमण्डले ।
इति स्तुतस्त्रिदशवरैर्जगत्पते
मरुत्पुरीनिलय गदात् प्रपाहि माम् ॥१०॥

O Lord of the Universe! The great gods praised Thee saying that the meal taken happily with the Gopa boys gave Thee more pleasure than the sacrificial offerings which Thou had received with the gods. 

  
   
    


rkg

audioplayer