ULLUKALA BANDHANAM - episode -47

                                                                 


 ஜோன்புரி
please listen using  the  audio  player  at  the end  of  this  page 
-------------------------------------------------------


47
ஒரு சமயம்‌ தயிர்‌ கடைந்து கொண்டிருக்கும்‌ தாயாரிடம்‌ பால்‌ குடிக்க விருப்பமுற்று அவள்‌ மடியில்‌ ஏறியமர்ந்து தயிர்‌ கடைவதைத்‌ தடுத்து நிறுத்திப்‌ பால்‌ குடித்தீர்கள்‌. (1)

ஈசனே! தாமரை மலர்‌ போன்ற திருமுகத்தில்‌ அழகிய புன்முறுவலுடன்‌ தாங்கள்‌, தாமரை மொட்டுகள்‌ போன்ற நகில்களில்‌ பால்‌ பாதி அருந்தி இருக்கையில்‌, தீயில்‌ பொங்கி வழியும்‌ பாலை எடுத்து வைப்பதற்காகத்‌: தங்கள்‌ தாய்‌ (தங்களை மடியிலிருந்து கீழே இறக்கி. வைத்துவிட்டு) விரைவாகச்‌ சென்றாள்‌. (2)

 தேவனே! பால்‌ பாதி அருந்தி இருக்கையில்‌ (அதாவது மனமார முழுமையாகப்‌ பாலை அருந்தி முடியாத நிலையில்‌) ஏற்பட்ட தடங்கலினால்‌ சினம்‌ கொண்ட தாங்கள்‌ செய்வதறியாது (அங்கிருந்த) மத்தை எடுத்துத்‌ தயிர்ச்சட்டியை உடைத்தீர்கள்‌. (3)

சட்டியுடைந்த சத்தத்தைக்‌ கேட்டு விரைவாக ஓடி வந்த தங்கள்‌ தாய்‌ தங்கள்‌ "புகழ்‌ பரவியிருப்பதுபோல்‌ தரையில்‌ எங்கும்‌ பரவிச்‌ சிதறிக்‌ கிடந்த தயிரை மட்டுமே கண்டாள்‌ (தங்களைக்‌ காணவில்லை என்பது கருத்து)  (4)


பகவானையே என்றும்‌ நினைந்துருகும்‌ முனிவர்களும்‌, கர்ம காண்டம்‌. உபாஸனா காண்டம்‌, ஞான காண்டம்‌ என்கிற முக்காண்டங்களையும்‌ தன்னுள்‌ அடக்கியவேதநெறிகளால்‌ தேடிக்‌ காண இயலாத தங்களைப்‌ பெரும்‌ புண்ணியம்‌ செய்த யசோதை (தான்‌ கீழே இறக்கிவிட்ட இடத்தில்‌ காணாது) மிகுந்த சினத்துடன்‌ தேடிப்‌ போக(ப்‌ புறக்கடையில்‌) உரல்‌ மேல்‌ அமர்ந்து கொண்டு பூனைக்கு வெண்ணெய்‌ எடுத்துக்‌ கொடுத்துக்‌ கொண்டிருக்கக்‌ கண்டாள்‌. (5) 

தாய்‌ அடிப்பாளோ என்ற பயத்தினால்‌ மேலும்‌ அழகாக விளங்கும்‌ தாமரை போன்ற முகத்தை உடைய தங்களை, கோபத்தால்‌ சிவந்த முகத்தையுடைய யசோதை (தன்‌) தோழிகளின்‌ முன்னிலையில்‌ வெகுவேகமாகப்‌ பற்றிக்‌ கொண்டு (உரலில்‌ சேர்த்துக்‌) கட்டுவதற்காகக்‌ கயிற்றை எடுத்துக்‌ கொண்டாள்‌. இது வியப்பல்லவா? (6) 

சாது பக்த ஜனங்கள்‌ (மோக்ஷத்தில்‌ விருப்பங்கொண்டு) தங்களையே நெருங்கிய உறவினனாகப்‌ பிணிக்க விரும்புகிறார்கள்‌. அப்படிப்பட்ட தங்களை அந்த யசோதை கயிற்றினால்‌ கட்ட விரும்பிப்‌ பல கயிறுகளை ஒன்று சேர்த்து இணைத்தபோதும்‌, ஒவ்வொரு தடவையும்‌ அவை இரண்டங்குலம்‌ குறைவாய்‌ இருக்கவே கண்டாள்‌. (இங்கு 'பந்தும்‌' என்ற சொல்‌ உறவினன்‌, கட்டுதல்‌, அடைக்கலம்‌ என்ற முப்பொருள்‌ தோன்றும்படி சிலேடையாக அமைந்துள்ளது காண்க. பகவானை அளப்பதற்கு எந்த ஸாதனங்களும்‌ குறைபாடு உடையனவே என்று அறிக.


சகல பாவங்களையும்‌ போக்குபவரே! ஹரியே! உடம்பெல்லாம்‌ வியர்த்து சோர்ந்து போன யசோதையைக்‌ கண்ட தோழிகள்‌ வியப்பில்‌ ஆழ்ந்து சிரித்துக்‌ கொண்டிருப்பதைக்‌ கண்டு, எதிலும்‌ கட்டுப்படாத நித்திய முக்த புருஷனான தாங்கள்‌ கருணையினால்‌ இரக்கம்‌ கொண்டு அவளுக்குக்‌ கட்டுப்பட்டீர்கள்‌. இதுவன்றோ வியப்பு! (8)

இவ்வாறு தங்களைக்‌ கட்டிய யசோதை, 'அடே போக்கிரிப்‌ பையா! இந்த உரலிலேயே வெகுநேரம்‌ இப்படியே கட்டுண்டு இரு: என்று சொல்லி வீட்டினுள்‌ திரும்பிச்‌ சென்றாள்‌. அவ்வாறு அவள்‌ சென்றதும்‌, முன்பே வெண்ணெய்‌ திருடும்போது உரல்‌ குழியில்‌ வைத்திருந்த வெண்ணெயைத்‌ தின்று கொண்டு அங்கேயே இருந்தீர்களல்லவா?  (9)

பிரபுவே, குருவாயூரப்பா! பாசமில்லாதவர்களால்‌ (பற்றற்றவர்களால்‌) மட்டுமே எளிதாக அடையக்கூடிய தாங்கள்‌: பாசத்தை (கயிற்றை)க்‌ கையில்‌ கொண்ட இந்த யசோதையால்‌ எப்படிக்‌ கட்டப்பட்டீர்கள்‌?” என்றிவ்வாறு தேவர்களால்‌ துதிக்கப்‌ பெற்ற தாங்கள்‌ என்னை நோயிலிருந்து காப்பாற்றுங்கள்‌. (இங்குபாசம்‌என்னும்‌ சொல்‌ கயிறு, பற்று என்ற இரு பொருள்படுமாறு கையாளப்பட்டது காண்க.) (10)
 
एकदा दधिविमाथकारिणीं मातरं समुपसेदिवान् भवान् ।
स्तन्यलोलुपतया निवारयन्नङ्कमेत्य पपिवान् पयोधरौ ॥१॥

Once when Thy mother was churning the curd, Thou approached her in the eagerness to be breast fed. Obstructing her churning Thou climbed up her lap and sucked at her breasts.  
------------------------------------------------------------------

अर्धपीतकुचकुड्मले त्वयि स्निग्धहासमधुराननाम्बुजे ।
दुग्धमीश दहने परिस्रुतं धर्तुमाशु जननी जगाम ते ॥२॥

O Lord! Thou had half-way sucked her lotus bud like breasts, with a charming smile playing on the sweet lotus like face. Just then, Thy mother went away in a haste to quickly hold the milk which had overflown on the fire.
--------------------------------------------------------------------
सामिपीतरसभङ्गसङ्गतक्रोधभारपरिभूतचेतसा।
मन्थदण्डमुपगृह्य पाटितं हन्त देव दधिभाजनं त्वया ॥३॥

O Lord! Having drunk half way, and as a result the joy being interrupted, Thy mind was overcome with great rage. Oh! Then taking up the churning rod, the curd pot was broken by Thee. 
--------------------------------------------------------------------
उच्चलद्ध्वनितमुच्चकैस्तदा सन्निशम्य जननी समाद्रुता ।
त्वद्यशोविसरवद्ददर्श सा सद्य एव दधि विस्तृतं क्षितौ ॥४॥

Thy mother came running when she heard the loud sound rising of the pot being broken. Right then she saw the curd spreading on the floor,even like Thy pure unblemished fame spreading in the universe.
----------------------------------------------------------------  
वेदमार्गपरिमार्गितं रुषा त्वमवीक्ष्य परिमार्गयन्त्यसौ ।
सन्ददर्श सुकृतिन्युलूखले दीयमाननवनीतमोतवे ॥५॥
 

Thou who are sought after through the path of the Vedas, were not seen anywhere by Thy angered mother. She, the fortunate one searched everywhere and saw Thee sitting on the mortar feeding butter to the cat.
-------------------------------------------------------------
त्वां प्रगृह्य बत भीतिभावनाभासुराननसरोजमाशु सा ।
रोषरूषितमुखी सखीपुरो बन्धनाय रशनामुपाददे ॥६॥

Oh! Yashodaa with her face quivering due to anger, hastily caught hold of Thee whose lotus like face was looking very sweet with pretended fear. As her friends watched, she took a rope to tie Thee up. 
-----------------------------------------------------------
बन्धुमिच्छति यमेव सज्जनस्तं भवन्तमयि बन्धुमिच्छती ।
सा नियुज्य रशनागुणान् बहून् द्व्यङ्गुलोनमखिलं किलैक्षत ॥७॥

All good men want to bind themselves to Thee alone in devotion. That Thou O Lord! Yashodaa desiring to tie, found the length of the rope short by two fingers, even though she attached many pieces of ropes to lengthen it. 
------------------------------------------------------------
विस्मितोत्स्मितसखीजनेक्षितां स्विन्नसन्नवपुषं निरीक्ष्य ताम् ।
नित्यमुक्तवपुरप्यहो हरे बन्धमेव कृपयाऽन्वमन्यथा: ॥८॥

As Thy mother's friends were smilingly watching with wonder, Thou saw her body perspiring and exhausted due to the effort. O Hari! Thou who are the ever-free Being, out of compassion accepted the bondage.
-----------------------------------------------------------
स्थीयतां चिरमुलूखले खलेत्यागता भवनमेव सा यदा।
प्रागुलूखलबिलान्तरे तदा सर्पिरर्पितमदन्नवास्थिथा: ॥९॥

As Yashodaa went back into the house, she said 'O Rogue! stay tied like this to the mortar for long.' Thou stayed there eating the butter which Thou had earlier placed in the cavity of the mortar. 
--------------------------------------------------------
यद्यपाशसुगमो विभो भवान् संयत: किमु सपाशयाऽनया ।
एवमादि दिविजैरभिष्टुतो वातनाथ परिपाहि मां गदात् ॥१०॥

O All Pervading Being! If Thou are easily attainable to the desire less (a-paash) people, who are not bound by desire, how was it that Yashodaa was able to secure Thee with a (paash) rope for binding. Thou whose glories were thus sung by the gods in the heaven, O Lord of Guruvaayur! May Thou save me from my ailments. 
============================================================     
 
  

audioplayer