NAMA KARANAM - NaraayaNeeyam- episode-44




RAGAM -                AANANDABAIRAVI   ஆனந்தபைரவி
----------------------------------

rendered  by  Trisoor Ramachanfran
( public  domain  by  saregama)
(mp3  contributed  by C.Ramakrishnan 
please listen using  the  audio  player  at  the end  of  this  page

ல்லுநரான கர்க்க முனிவர்‌ எவ்வித கர்மாவுமற்ற தங்களுக்குப்‌ பெயர்‌ சூட்டுதல்‌ (நாமகரணம்‌) முதலிய சடங்குகளை ஒருவருமறியாதவாறு செய்வதற்காகத்‌ தங்கள்‌ வீட்டிற்கு வந்தார்‌. (1)

2
அப்பொழுது மனம்‌ மகிழ்ந்த நந்தகோபன்‌ (குழந்தைக்குப்‌ பெயரிடல்‌ முதலிய மங்களச்‌ சடங்குகளைச்‌ செய்ய) ஆவல்‌ கொண்டு புன்முறுவல்‌ பூத்து' நிற்கும்‌ முனிவர்களில்‌ சிறந்த கர்க்க முனிவரை உரிய முறையில்‌ உபசரித்து, குழந்தையான தங்களுக்குச்‌ செய்ய வேண்டிய ஸம்ஸ்காரங்களைச்‌ செய்யுமாறு வேண்டிக்‌ கொண்டார்‌. (2)

3
அப்பொழுது தளிர்‌ போன்ற தங்களது திருமேனியைத்‌ தீண்டியதால்‌ மயிர்க்கூச்செறிந்து நிற்கும்‌ கர்க்க முனிவர்‌ (நந்தகோபரிடம்‌), ஐயா! யதுகுலத்திற்கு ஆசிரியனாக இருப்பதால்‌ நான்‌ இதை (குழந்தைக்குப்‌ பெயரிடுதலை) மிகவும்‌ *ரகசியமாகச்‌ செய்ய வேண்டும்‌' என்று கூறி, தமையனோடு கூடிய தங்களுக்கு நாமகரணம்‌ (பெயர்‌ சூட்டுதலைச்‌) செய்தார்‌. (3)

4
பிரபுவே, குருவாயூரப்பா! ஆயிரம்‌ திருநாமங்களையும்‌, அளவிலா திருநாமங்களையும்‌ கொண்ட இவனுக்கு நான்‌ எப்படிப்‌ பெயர்‌ சூட்டுவேன்‌? எந்தப்‌ பெயரைச்‌ சூட்டுவேன்‌என்று வியந்த கர்க்க முனிவர்‌ ரகசியமாகத்‌ தங்களுக்குப்‌ பெயர்‌ சூட்டினார்‌ (என்று கருதுகிறேன்‌). ப (4)

5
'க்ருஷி' என்ற வினையடிச்‌ சொல்லையும்‌, 'ண: என்ற எழுத்தையும்‌ கூட்டவே .கிருஷ்ணன்‌என்ற சொல்‌ உண்டாகிறது.க்ருஷி' என்ற வினையடிச்‌ சொல்‌ 'ஸத்‌' என்பதையும்‌, “என்ற எழுத்து 'ஆனந்தம்‌' என்பதையும்‌ குறிக்கின்றன. ஆக 'க்ருஷி', '' என்ற இரண்டும்‌ புணர ஸத்‌ சித்‌ ஆனந்தம்‌ ஆகிய பரமாத்மாவான பரமனே 'கிருஷ்ணன்‌' என்றாகிறது. இக்கருத்தை . மனதில்‌ கொண்டோ அல்லது அகில உலகின்‌ பாவங்களையும்‌ களைபவர்‌ என்ற தன்மையை நினைத்தோ, தங்களுக்கு 'கிருஷ்ணன்‌' என்ற பெயரைச்‌ சூட்டினார்‌. (5)

தங்களுக்குள்ள வேறு பல பெயர்களையும்‌, தங்கள்‌ தமையனுக்கு 'ராமன்‌' முதலிய வேறு பல பெயர்கள்‌ உள்ளதையும்‌ நன்கு விளக்கிக்‌ கூறி, (அந்த கர்க்க முனிவர்‌) தாங்கள்‌ ஸ்ரீபகவானே என்பதை வெளிப்படுத்தாது, 'மனித இயற்கையை மீறிய பெருமையுடையவர்கள்‌
இக்குழந்தைகள்‌' என்பதை மட்டும்‌ கூறிச்‌ சென்றார்‌ (6)

அந்த முனிபுங்கவர்‌ தங்கள்‌ பெருமையைப்‌ பற்றி (நந்தகோபரிடம்‌) பின்வருமாறு உரைத்தார்‌.எந்த ஒருவன்‌ தங்கள்‌ மகனிடம்‌ அன்பு செலுத்துகிறானோ (பக்தி செய்கிறானோ), அவன்‌ (உலகில்‌) மாயையினாலும்‌, (அதனால்‌ உண்டாகும்‌) துன்பங்களினாலும்‌ கலக்கமுறுவதில்லை. எவன்‌ பகைமை கொள்கிறானோ, அவன்‌ அழிவது உறுதி.” (7)

இக்குழந்தை பலபல அஸுரர்களை வெல்வான்‌. உற்றார்‌-உறவினர்களைக்‌ களங்கமற்ற பரமபதத்திற்கு அழைத்துச்‌ செல்வான்‌. இவனது மாசற்ற புகழை உலகமெல்லாம்‌ கேட்கும்‌என்றும்‌ தங்களது பெருமைகளையெல்லாம்‌ கர்க்க முனிவர்‌ கூறினார்‌. .. (8)

இக்குழந்தை பகவான்‌ ஸ்ரீஹரியேதான்‌ என்று வெளிப்படையாகச்‌ சொல்லாமல்‌ சொல்லி, ‘இக்குழந்தையால்‌ நீங்கள்‌ துன்பங்கள்‌ அனைத்தையும்‌ கடப்பீர்கள்‌. இக்குழந்தையை நம்பியிருங்கள்‌' என்று தங்களை கர்க்க முனிவர்‌ மிகவும்‌ புகழ்ந்தார்‌. (9)


குருவாயூரப்பா! கர்க்க முனிவர்‌ இவ்வாறு கூறிவிட்டு, (அங்கிருந்து) சென்றபின்‌ நந்தகோபன்‌ முதலியவர்கள்‌ மிக்க மகி ழ்ச்சியடைந்து தங்களைச்‌ சீராட்டிப்‌ பாராட்டினார்கள்‌ அப்படிப்பட்ட தாங்கள்‌ கருணைகூர்ந்து எனது நோய்களைப்‌ போக்கியருள வேண்டுகிறேன்‌. (10) 
















गूढं वसुदेवगिरा कर्तुं ते निष्क्रियस्य संस्कारान् ।
हृद्गतहोरातत्त्वो गर्गमुनिस्त्वत् गृहं विभो गतवान् ॥१॥
O All pervading Lord! Thou are above and beyond all ceremonies and rites. Yet, Garga Muni an expert at astronomy and astrology, went to Thy house at the secret request of Vasudeva, to perform sacraments for Thee.
-------------------------------------------------------------

नन्दोऽथ नन्दितात्मा वृन्दिष्टं मानयन्नमुं यमिनाम् ।
मन्दस्मितार्द्रमूचे त्वत्संस्कारान् विधातुमुत्सुकधी: ॥२॥
Nanda was very delighted and he honoured the greatest of all the sages Garga Muni, who was eager to perform the sacraments for Thee. He then, with a gentle smile requested the sage to perform the rites.
--------------------------------------------------------------

यदुवंशाचार्यत्वात् सुनिभृतमिदमार्य कार्यमिति कथयन् ।
गर्गो निर्गतपुलकश्चक्रे तव साग्रजस्य नामानि ॥३॥

Sage Garga said,'O Respected Nanda, since I am the priest of the Yadu clan, this ceremony must be performed in great secrecy'. Saying so, with horripilation over his body he performed the naming ceremony of Thee and Thy elder brother.
----------------------------------------------------------------

कथमस्य नाम कुर्वे सहस्रनाम्नो ह्यनन्तनाम्नो वा ।
इति नूनं गर्गमुनिश्चक्रे तव नाम नाम रहसि विभो ॥४॥

How should I do the naming of this child? He indeed has thousands of names or rather endless names. O Lord! May be that sage Garga thinking like this, performed Thy naming in great secrecy.
-----------------------------------------------------------------

कृषिधातुणकाराभ्यां सत्तानन्दात्मतां किलाभिलपत् ।
जगदघकर्षित्वं वा कथयदृषि: कृष्णनाम ते व्यतनोत् ॥५॥
The putting together of the root of the verb Krish and the suffix N, denoting the combining of Existence and absolute Bliss, which is Thy real nature, declaring, the sage gave Thee the name Krishna. Also signifying the drawing away of the sins of the people of the world, the name Krishna was given to Thee.
---------------------------------------------------------------
अन्यांश्च नामभेदान् व्याकुर्वन्नग्रजे च रामादीन् ।
अतिमानुषानुभावं न्यगदत्त्वामप्रकाशयन् पित्रे ॥६॥

The sage also gave Thee other different names like Vaasudeva. Then he gave the name Raama etc to Thy elder brother. Having done so, Garg Muni indicated to Thy having superhuman powers and disposition, to Thy father. Yet he did not fully reveal Thy real identity as Lord Himself.
--------------------------------------------------------------
स्निह्यति यस्तव पुत्रे मुह्यति स न मायिकै: पुन: शोकै: ।
द्रुह्यति य: स तु नश्येदित्यवदत्ते महत्त्वमृषिवर्य: ॥७॥

Who so ever loves your son will not be deluded by Maayaa and so will not be overcome by sorrows thereafter. And who so ever assails him will certainly perish.' Thus the great sage described Thy glory and greatness
-------------------------------------------------------------
जेष्यति बहुतरदैत्यान् नेष्यति निजबन्धुलोकममलपदम् ।
श्रोष्यसि सुविमलकीर्तीरस्येति भवद्विभूतिमृषिरूचे ॥८॥
He will conquer many Asuras and will take his own people to the realms of purity. You will have occasions to hear of his untainted pure fame.' Thus the sage spoke of Thy greatness.
--------------------------------------------------------------
अमुनैव सर्वदुर्गं तरितास्थ कृतास्थमत्र तिष्ठध्वम् ।
हरिरेवेत्यनभिलपन्नित्यादि त्वामवर्णयत् स मुनि: ॥९॥
By his help alone you will be able to overcome all obstacles. Remain with your full faith placed in him.' Thus without saying that Thou were Hari, the sage thus described Thee
------------------------------------------------------------------
गर्गेऽथ निर्गतेऽस्मिन् नन्दितनन्दादिनन्द्यमानस्त्वम् ।
मद्गदमुद्गतकरुणो निर्गमय श्रीमरुत्पुराधीश ॥१०॥
Then Garga Muni went away. Nanda and the others were very delighted and looked after Thee endearingly. O Lord of Guruvaayur! who are full of compassion, remove my ailments.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
     


audioplayer