THE GAMBLE AND GREAT WAR ( episode-86)

                                                          HAMSAANADHI  RAGAM
---------------------------------------------------------------------------------
ragam Hamsanandhi
Rendition  by Trisoor Ramachandran
Donated  by  SAREGAMA
mp3  contributed  by  C.Ramakrishnan 
please listen using  the  audio  player  at  the end  of  this  page
-------------------------------------------------------------------------
முன்பு ருக்மிணி திருமணத்தின் போது யாதவர்களால் வெற்றி கொள்ளப்பட்ட (சிசுபாலனின் நண்பன்) ஸால்வன் (தவம் செய்து) பரமசிவனிடமிருந்து ஸௌபம் என்கிற திவ்வியமான விமானத்தைப் பெற்றிருந்தான். (ராஜஸூய வேள்வியை நடத்தித் தருவதற்காகத்) தாங்கள் குரு தேசத்தில் வசித்து வருகையில், மாயையில் வல்லவனான அந்த ஸால்வன் தங்களது நகரமாகிய துவாரகையைத் தாக்கினான். (தங்கள் மகனான) பிரத்யும்னன் யாதவப் படை அனைத்துடனும் திறன்மிக்க ஸால்வனை அடக்கி, அவனது மந்திரியான த்யுமான் என்பவனைக் கொன்றான். இந்தப் போர் இருபத்து ஏழு நாட்கள் நடந்தது.  
--------------------------------------------------------------------------------

இதற்குள் தாங்கள் பலராமனுடன் விரைவாக வந்து சேர்ந்து அநேகமாக முறியடிக்கப்பட்ட சேனையுடன் இருந்த ஸௌபம் எனப்பட்ட விமானத்தின் தலைவனான ஸால்வனைத் தடுத்தீர்கள். அவனும் தங்களது சார்ங்கம் என்ற வில்லைத் தனது கதையால் (உங்கள் திருக்கரங்களிலிருந்து) நழுவி விழச் செய்தான். (மாயையை வென்றவனான) தங்களது முன்னிலையிலேயே மாயையால் தோற்றுவிக்கப்பட்ட தங்களது பிதாவின் திருவுருவத்தை
பொய்யுருவை)க் கொன்றான். அந்த மாயையைப் பொய் என்று அரை நிமிட நேரம் தாங்களும் கூட உணரவில்லை என்றல்லவா சிலர் கூறுகிறார்கள். (தாங்களே மயங்கினீர்கள்' என்று பிறர் கூறும்) அந்த அவச்சொல்லை வியாஸர்தான் இல்லையென ஆக்கினார்
--------------------------------------------------------------------
அந்த ஸால்வனுடைய ஸௌபம் என்ற விமானத்தைக் கதையால் நொறுக்கித் தள்ளிக் கடலில் வீழ்த்தியபின், விரைவில் ஸால்வனையும் சக்கராயுதத்தால் வெட்டி வீழ்த்தினீர்கள். (இதைக் கண்ட) அவனது நண்பன் தந்தவக்த்ரன் எதிர்த்து வந்து தங்கள் மேல் கதாயுதத்தை வீசி எறிந்தான். தாங்களோ அவனைத் தங்களது கௌமோதகீ என்ற கதையால் - 4 அடித்துக் கொன்றீர்கள். புண்ணியத்தின் களஞ்சியமான (பெரும் புண்ணியம் செய்திருந்த அவனும் , சிசுபாலனைப்போல் தங்களிடம் ஒன்றுபட்டான் (ஐக்கியமடைந்தான்). முற்பிறவிகளில் (ஏதோ ஒரு காரணத்தினால்) தங்களிடமே மனதைப் பறிகொடுத்த யாவருக்கும் மோக்ஷமளிப்பதற்கென்றே இந்த ஸ்ரீகிருஷ்ணாவதாரமோ?  
----------------------------------------------------


------------------------------------------------
ஹே குருவாயூரப்பா! (ராஜஸூய யாகம் முடிந்து) தாங்கள் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றபின், கௌரவ சபையில் சூதாட்டம் நடந்தது. அது சமயம் பணயம் வைக்கப்பட்டு ஜயிக்கப்பட்ட திரௌபதி (தனது ஆடையை துச்சாதனன் கவர்ந்திழுக்கத்) தங்களை நினைத்துக் கதறியபோது கருணை கொண்ட தாங்கள் வரிசை வரிசையாக அளவற்ற சேலையை அருளினீர்கள். பின்பொரு சமயம் வனவாஸத்தில் பரமசிவ அம்சமான துர்வாஸர் அதிதியாக வந்து சேர பயந்து பெருந்துன்பத்தையடைந்த திரௌபதி தங்களை மனதால் நினைத்துத் தியானிக்கவே, தாங்கள் (உடனே) அங்கெழுந்தருளி (பாத்திரத்தின் விளிம்பில் ஒட்டியிருந்த) கீரைத் துணுக்கை உண்டு, துர்வாஸரையும் அவருடன் வந்திருந்த முனிவர்கள் அனைவரையும் (சாப்பிடாமலேயே) சாப்பிட்ட மாதிரியாக திருப்தியடையச் செய்தீர்கள். 
------------------------------------------------------------------------------------

 (வனவாஸம் முடிந்த பிறகு போருக்கு வேண்டிய ஆலோசனையும் முயற்சியும் நடந்தபோது, (அர்ஜுனனும், துரியோதனனும் தங்களது உதவியை நாடவே) துரியோதனனுக்குத் தங்களது படை முழுவதையும் அளித்துவிட்டு, அர்ஜுனன் வேண்டியபடி அவனுக்குத் தாங்கள் தனியொருவராகவே உதவுவதாக வாக்களித்துவிட்டுப் பாண்டவ தூதுவனாக ஹஸ்தினாபுரம் சென்றீர்கள். சபையில் தாங்கள் பேசியதை பீஷ்மர், துரோணர் முதலியவர்கள் கொண்டாட துரியோதனன் (மாத்திரம்) நிராகரித்தான். அதுசமயம் முனிவர்களும் அடங்கிய அந்த சபையில் விசுவரூபத்தைக் காண்பித்து, அந்நகரத்தையே கலங்கும்படிச் செய்துவிட்டுப் பாண்டவர்களிடம் திரும்பி வந்தீர்கள்
---------------------
ஸ்ரீகிருஷ்ணா ! அர்ஜுனனுக்குச் சாரதியாக விளங்கிய தாங்கள் போரின் தொடக்கத்தில் உற்றார் உறவினர்களைக் கொல்ல அஞ்சி மனதில் கருணை கொண்டு அர்ஜுனன் வருந்தியது கண்டு, "நண்பனே! இதென்ன? இந்த ஆத்மா ஒன்றுதான் நித்தியமானவன். கொல்பவன் யார்? கொல்லப்படுபவன் யார்? (போரிலே வதம் என்பது க்ஷத்திரியர்களுடைய தர்மம்). போரில் பயத்தை விடுத்து உன் மனதை என்னிடம் அர்ப்பணம் செய்து, உனது க்ஷத்திரிய தர்மமான போரைச் செய்" என்று சொல்லி விசுவரூபத்தைக் காண்பித்து, அவனைத் தனது இயல்பை அடையச் செய்தீர்கள். 
------------------------------

 என் பக்தர்களுக்குள் தலைசிறந்தவரான பீஷ்மாசார்யார் பூபாரத்தை நீக்கும் தங்களது செயலிலேயே ஈடுபட்டு நாள் தோறும் பதினாயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிப் படையினரைக் கொன்று குவித்தார். பீஷ்மரின் பாணங்களால் அர்ஜுனன் சோர்வடைந்தபொழுது, 'போரில் ஆயுதம் எடுப்பதில்லை' என்ற சூளுரையை விடுத்துத் தாங்கள் மிக்க கோபம் கொண்டவர் போன்று சிறந்த ஆயுதமான சுதர்சன சக்கரத்தைக் கையிலேந்தி பீஷ்மரை நோக்கி ஓடினீர்கள். (தாங்கள் அவ்வாறு வருவதைக் கண்ட) பீஷ்மர் கைகூப்பியவண்ணம் தலை வணங்கி நிற்பது கண்டு தாங்கள் மிக்க மகிழ்ச்சியோடு திரும்பிவிட்டீர்கள். 
-------------------------------------------------------------
துரோணரோடு போர் செய்து கொண்டிருந்த சமயம் (நான்கு தந்தங்களோடு கூடிய) யானையின் மேல் ஏறிக் கொண்டு போர் புரிந்த பகதத்தனால் ஏவப்பட்ட வைஷ்ணவமான ஸ்ரீநாராயணாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் படாமல் மார்பில் ஏற்றுக் கொண்டீர்கள். சுதர்சன --- சக்கரத்தால் சூரியனை மறைத்து சிந்து தேச அரசனான ஜயத்ரதனை (அர்ஜுனனைக் கொண்டு) வதம் செய்தீர்கள். கர்ணன் (அர்ஜுனனைக் கொல்ல) நாகாஸ்திரத்தை விடுத்தபொழுது பூமியைச் சிறிது அழுத்தி(த் தலையைக் கொய்ய வந்த பாணம்) அர்ஜுனனுடைய கிரீடத்தை மட்டும் கவர்ந்து கொண்டு போகுமாறு செய்து அவனைக் காப்பாற்றினீர்கள். அவ்வப் பாண்டவர்களுக்குத் தாங்கள் என்னதான் செய்யவில்லை? 
------------------------------
பாரதப் போர் தொடங்குகையில் (அதில் பங்கேற்க மனமின்றி) பலராமன் தீர்த்த - யாத்திரையாக நைமிசாரணியம் சென்றார். அங்கு சூத புராணிகர் ஆசனத்திலிருந்து எழுந்து - க்கு மரியாதை செலுத்தவில்லை என்பதற்காக அவரை வதம் செய்தார். அவருடைய இடத்தில் அவர் மகனை அமர்த்தினார். ஒவ்வொரு பருவ காலங்களிலும் வேள்விக்கு இடையூறு விளைவித்து வந்த வல்வலன் என்ற அஸுரனைக் கொன்றார். தீர்த்தயாத்திரையை முடித்துக் கொண்டு பாரத யுத்த முடிவில் (குருக்ஷேத்திரம்) வந்த பலராமர் பீமனுக்கும், துரியோதனனுக்குமிடையே போர் முடிவடையாமலிருந்ததைக் கண்டு தங்களது நகரான துவாரகைக்குச் சென்றார்.  
 ------------------------------------------------------
தூங்கிக் கொண்டிருக்கும் திரௌபதியின் புதல்வர்களான உப பாண்டவர்களைக் கொன்றதால் புத்தி மழுங்கிய அசுவத்தாமாவை(த் தண்டிக்க விரும்பி) நெருங்கிய அர்ஜுனன் அந்த அசுவத்தாமாவினால் பிரயோகிக்கப்பட்ட பிரம்மாஸ்திரத்தைத் தங்கள் சொற்படி திரும்பப் பெற்றுக் கொண்டான். அவன் தலையில் அணிந்திருந்த சிரோரத்தினத்தையும் கவர்ந்து கொண்டான். பிறகு அசுவத்தாமா பாண்டவர் குலத்தை அடியோடு அழிக்க விரும்பி விடுத்த அஸ்திரம் (அபாண்டவாஸ்திரம்) அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் (அவளது வயிற்றில்) வளரும் கருவை அழிக்கப் புகுந்தபொழுது, பிரபுவே தாங்கள் கட்டைவிரல் அளவினராகச் சக்கரபாணியாகக் கருவைக் காக்க உத்தரை வயிற்றில் புகுந்தீர்கள் அல்லவா?  
--------------------------------
தன் விருப்பப்படி மரணமடைய வரம் பெற்றிருந்த பீஷ்மர், தருமபுத்திரருக்கு எல்லா தர்மங்களையும் எடுத்துரைத்தார். (அதன்பின்) பக்தியின் மேன்மையினால் தங்களை நேரிலே தரிசித்துக் கொண்டே நிர்குண பிரம்ம நிலையை உடனே அடைந்தாரல்லவா
--
 
-------------------------------------------------------------------
साल्वो भैष्मीविवाहे यदुबलविजितश्चन्द्रचूडाद्विमानं
विन्दन् सौभं स मायी त्वयि वसति कुरुंस्त्वत्पुरीमभ्यभाङ्क्षीत् ।
प्रद्युम्नस्तं निरुन्धन्निखिलयदुभटैर्न्यग्रहीदुग्रवीर्यं
तस्यामात्यं द्युमन्तं व्यजनि च समर: सप्तविंशत्यहान्त: ॥१॥

Saalva of magical merits, who was defeated by the Yaadava army at the time of Rukmini's abduction, got Saubh the aerial car as a boon from Shivaa.When Thou were residing in the city of the Kurus, Indraprastha, Saalva attacked Thy city Dwaarika. Pradyumna resisted him heading the entire army of the Yaadavas, and killed his powerful minister Dyumanta. This battle lasted for 27 days.  
--------------------------------------------------------------------

तावत्त्वं रामशाली त्वरितमुपगत: खण्डितप्रायसैन्यं
सौभेशं तं न्यरुन्धा: स च किल गदया शार्ङ्गमभ्रंशयत्ते ।
मायातातं व्यहिंसीदपि तव पुरतस्तत्त्वयापि क्षणार्धं
नाज्ञायीत्याहुरेके तदिदमवमतं व्यास एव न्यषेधीत् ॥२॥

Along with Balaraam Thou quickly reached Dwaarika and confronted Saalva the owner of the aerial car Saubha whose army was almost destroyed. He knocked down Thy bow Shaaranga with a stroke of his mace. He even killed the likeness of Thy father which he had created by his magical abilities. Some say that even Thou were for a moment deceived by this illusion. But sage Vyaas has refuted this opinion.
------------------------------------------------------------------
क्षिप्त्वा सौभं गदाचूर्णितमुदकनिधौ मङ्क्षु साल्वेऽपि चक्रे-
णोत्कृत्ते दन्तवक्त्र: प्रसभमभिपतन्नभ्यमुञ्चद्गदां ते ।
कौमोदक्या हतोऽसावपि सुकृतनिधिश्चैद्यवत्प्रापदैक्यं
सर्वेषामेष पूर्वं त्वयि धृतमनसां मोक्षणार्थोऽवतार: ॥३॥

The aerial car Saubha was smashed to pieces with a mace and thrown into the sea, Saalva's head was also cut off by Thy Sudershana discus. Dantavaktra then attacked Thee violently and hit Thee with his mace, thereupon Thou killed him, the repository of good deeds, with Thy mace Kaumodaki. He was fortunate like Shishupal (Chedi) and others who had attained union with Thee. The purpose of this incarnation of Thee was to give liberation to all those who had for long fixed their minds on Thee. 
---------------------------------------------------------------
त्वय्यायातेऽथ जाते किल कुरुसदसि द्यूतके संयताया:
क्रन्दन्त्या याज्ञसेन्या: सकरुणमकृथाश्चेलमालामनन्ताम् ।
अन्नान्तप्राप्तशर्वांशजमुनिचकितद्रौपदीचिन्तितोऽथ
प्राप्त: शाकान्नमश्नन् मुनिगणमकृथास्तृप्तिमन्तं वनान्ते ॥४॥

After Thy return to Dwaarikaa, a fraudulent game of dice took place in the assembly of the Kurus. Draupadi was dragged there by her hair. Piteously and helplessly crying she prayed to Thee. With compassion Thou endowed her with endless length of clothing. Further, when living in the forest, Draupadi was very frightened because sage Durvaasaa had come there with his people when the food was over. Draupadi again thought of Thee and Thou came to her rescue and ate a bit of the left over leafy vegetable and thereby satiated fully the hunger of the sage and his retinue. 
-----------------------------------------------------------------
युद्धोद्योगेऽथ मन्त्रे मिलति सति वृत: फल्गुनेन त्वमेक:
कौरव्ये दत्तसैन्य: करिपुरमगमो दूत्यकृत् पाण्डवार्थम् ।
भीष्मद्रोणादिमान्ये तव खलु वचने धिक्कृते कौरवेण
व्यावृण्वन् विश्वरूपं मुनिसदसि पुरीं क्षोभयित्वागतोऽभू: ॥५॥

As the preparations of the war were on and strategies were decided, Arjuna asked Thee alone to be on his side. Agreeing to that, Thou gave Thy army to Duryodhana. Taking on the role of a messenger of the Pandavas, Thou went to Hastinaapur. Indeed Thy words were honoured by Bhishma, Drona and others but Duryodhana rejected them altogether. Revealing Thy Cosmic form in the assembly of the sages Thou shook up the entire Hastinaapur and returned to Dwaarikaa. 
----------------------------------------------------------------
जिष्णोस्त्वं कृष्ण सूत: खलु समरमुखे बन्धुघाते दयालुं
खिन्नं तं वीक्ष्य वीरं किमिदमयि सखे नित्य एकोऽयमात्मा ।
को वध्य: कोऽत्र हन्ता तदिह वधभियं प्रोज्झ्य मय्यर्पितात्मा
धर्म्यं युद्धं चरेति प्रकृतिमनयथा दर्शयन् विश्वरूपम् ॥६॥

In Thy role as Arjuna's charioteer, Thou saw the warrior sad and dejected in the face of the war, with the pitiful thought of having to kill his relations and his own people. Thou said to him 'O Friend! What is this? Aatman is eternal and only one. Who is the slain and who is the slayer here? Therefore giving up all fear of killing, surrender yourself to Me and carry out this righteous war.' By saying so and showing him Thy cosmic form, Thou brought Arjuna back to a balanced state of mind. 
---------------------------------------------------------------------    
भक्तोत्तंसेऽथ भीष्मे तव धरणिभरक्षेपकृत्यैकसक्ते
नित्यं नित्यं विभिन्दत्ययुतसमधिकं प्राप्तसादे च पार्थे ।
निश्शस्त्रत्वप्रतिज्ञां विजहदरिवरं धारयन् क्रोधशाली-
वाधावन् प्राञ्जलिं तं नतशिरसमथो वीक्ष्य मोदादपागा: ॥७॥

Bhishma, one of the leading devotees was intent on helping in fulfilling Thy purpose of reducing the burden of the earth, and was killing almost 10,000 warriors everyday. Arjuna had become very exhausted in resisting Bheeshma. Forgetting Thy vow of not taking up arms in the war, Thou rushed towards Bheeshma with Thy great discus in hand as though in great anger. Bheeshma stood with folded hands and bent down his head as Thou approached him. Seeing him thus Thou were full of joy and desisted from attacking him. 
-----------------------------------------------------------------------
युद्धे द्रोणस्य हस्तिस्थिररणभगदत्तेरितं वैष्णवास्त्रं
वक्षस्याधत्त चक्रस्थगितरविमहा: प्रार्दयत्सिन्धुराजम् ।
नागास्त्रे कर्णमुक्ते क्षितिमवनमयन् केवलं कृत्तमौलिं
तत्रे त्रापि पार्थं किमिव नहि भवान् पाण्डवानामकार्षीत् ॥८॥

When the fight with Drona was going on Bhagadatta who was firmly seated on an elephant discharged the Vaishnava missile which Thou attracted towards Thy own chest and saved Arjuna. Arjuna was able to kill Jayadratha when Thy Sudarshana discus hid the rays of the sun. Again when Karna discharged the Naaga missile towards Arjuna, Thou lowered the earth by the pressure of Thy toe, so that only Arjun's crown got cut off and Arjuna was saved here also. What all did Thou not do for the benefit of the Paandavas.
-----------------------------------------------------------------------
युद्धादौ तीर्थगामी स खलु हलधरो नैमिशक्षेत्रमृच्छ-
न्नप्रत्युत्थायिसूतक्षयकृदथ सुतं तत्पदे कल्पयित्वा ।
यज्ञघ्नं वल्कलं पर्वणि परिदलयन् स्नाततीर्थो रणान्ते
सम्प्राप्तो भीमदुर्योधनरणमशमं वीक्ष्य यात: पुरीं ते ॥९॥

Just when the war was to begin Balaraama had gone away on a pilgrimage. He first covered the holy area of Naimishaaranya. Then he killed Suta for not having got up to honour him and installed his son in his place. Then he destroyed the Asura Valkala, who used to destroy the Yagnyas carried out on the full moon and new moon days. Completing his pilgrimage he returned to Kurukshetra. There when he saw the prolonged fight between Bheema and Duryodhana, he went away to Thy city of Dwaarika. 
------------------------------------------------------------------    
संसुप्तद्रौपदेयक्षपणहतधियं द्रौणिमेत्य त्वदुक्त्या
तन्मुक्तं ब्राह्ममस्त्रं समहृत विजयो मौलिरत्नं च जह्रे ।
उच्छित्यै पाण्डवानां पुनरपि च विशत्युत्तरागर्भमस्त्रे
रक्षन्नङ्गुष्ठमात्र: किल जठरमगाश्चक्रपाणिर्विभो त्वम् ॥१०॥

Drona's son, the evil minded Ashwatthaamaa had killed the sons of Draupadi when they were fast asleep. On Thy command Arjuna approached him and retracted the Brahmaastra discharged by him and clipped off his crest jewel.To cut off the line of the Paandavas, Ashwatthaamaa again sent the weapon into Uttara's womb to kill the foetus in there. To protect the foetus Thou entered her womb in the size of a thumb with Thy Sudarshana discus in hand. 
------------------------------------------------------------------
धर्मौघं धर्मसूनोरभिदधदखिलं छन्दमृत्युस्स भीष्म-
स्त्वां पश्यन् भक्तिभूम्नैव हि सपदि ययौ निष्कलब्रह्मभूयम् ।
संयाज्याथाश्वमेधैस्त्रिभिरतिमहितैर्धर्मजं पूर्णकामं
स्म्प्राप्तो द्वरकां त्वं पवनपुरपते पाहि मां सर्वरोगात् ॥११॥

The entire great Dharmas were taught to Yudhishthira by Bheeshma who could decide the moment of his death. On seeing Thee, by his devotional intensity alone he attained the indivisible state of Brahman. Thou enabled Yudhishthira to perform three great Ashwamedha Yangyas by which all his aspirations were fulfilled. Then Thou returned to Dwaarikaa.
============================================================
   
 


pp
DASAKAM 86.mp3 - https://drive.google.com/file/d/1nzFnwLupqR4oeLCCOibS5ms8WAjVXSkX

audioplayer