CART ASURA EPISODE - NaaraayaNeeyam( 42)

CART  ASURAN  VADHAM


  rendition  by  Trisoor Ramachandram
( placed  in public  domain  to  youtube  by SAREGAMA)
mp3  contributed  by  C.Ramakrshnan 

please listen using  the  audio  player  at  the end  of  this  page

RAGAM  ANDOLIKA

-----------------------------------------------------------------------

42-1
பிரபுவே, ஒருவாயூரப்பா! ஒரு சமயம்‌ தங்களது பிறந்த திருநக்ஷத்திரத்தைக்‌
கொண்டாடுவதற்காக கோகுலத்தின்‌ தலைவியான யசோதை உறவினர்களையும்‌, பெண்களையும்‌, அந்தணர்களையும்‌ தன்‌ வீட்டிற்கு அழைத்திருந்தாள்‌. தங்களை: ஒரு கட்டை வண்டிக்கருகில் படுக்கவைத்துவிட்டுச் சமயலறையில் உள்ள வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். 

42-2
குழந்தையான ‌ கவனித்துக்‌ கொள்ள சில சிறுவர்களையும்‌ அமர்த்தியிருந்தாள்‌,
அப்பொழுது தங்கள்‌ அருகில்‌ இருந்த அந்த கட்டை வண்டியின்‌ பாகங்கள்‌ முறிந்து விழும்‌ 'சட்சட' என்ற பேரொலியும்‌, அது கேட்டு பயந்த சிறுவர்களின்‌ கூக்குரலொலியும்‌ ஒன்று சேரக்‌ கேட்டது. (2)

42-3
ஐயோ! குழந்தைக்கு என்ன நேர்ந்தது? என்ன நேர்ந்தது? என்று அலறிப் புடைத்துக் கொண்டு நந்தகோபரும், மற்ற இடையர்களும், அந்தணர்களும் கண்ணும் கண்ணீருமாக ஓடிவந்து பார்க்கவே யசோதையின் கையில் தாங்கள் (சுகமாக ) இருக்கக் கண்டு சற்றே மனம் ஆறுதல் அடைந்தனர்.

42-4
"இதென்ன? இதென்ன? இது எப்படி நடந்தது? இந்தப்‌ பெரிய வண்டி எப்படி
உடைந்தது? யார்‌ உடைத்தது? இங்கே (இது உடைவதற்கு) எவ்வித காரணமும்‌
தெரியவில்லையே?” என்று அவர்கள்‌ வியப்பால்‌ தங்கள்‌ மூக்கிலே கையை வைத்துக்‌ கொண்டுத்‌ தங்களையே உற்று நோக்கிக்‌ கொண்டு நின்றிருந்தனர்‌. : (5)


ஈசனே! 'பால்‌ குடிப்பதற்காக அழுத இக்குழந்தை தாமரை மலர்‌ போன்று மென்மையாக உள்ள தனது கால்களை ஆட்டி உதைத்ததால்‌ வண்டி குடை சாய்ந்து விழுந்து முறிந்தது. இதைநான்‌ பார்த்தேன்‌, நான்‌ பார்த்தேன்‌' என்று தங்களுக்குக்‌ காவலாக இருந்த சிறுவர்கள்‌ கூறினார்கள்‌.

அப்பொழுது தங்கள்‌ பெருமையறியாத சிலர்‌, “பயத்தால்‌ இக்குழந்தைகள்‌ ஏதோ
கூறுகின்றனர்‌. இது பொருத்தமற்றது'" என்றனர்‌. பூதனையின்‌ . நிகழ்ச்சியைக்‌ கண்ட நந்தன்‌ மூதலியவர்களோ (தங்களது மகிமையால்தான்‌ வண்டி முறிந்திருக்கும்‌ என்று) சிறிது ஐயமுற்றளர்‌. (7)

அழகிய கைகள்‌ புண்பட்டதோ?' என்று அங்கலாய்த்துக்‌ கருணை வெள்ளம்‌ பொங்கி எழும்‌ இடைச்சிமார்கள்‌ தங்களது திருமேனியைத்‌ தொட்டுத்‌ தொட்டுத்‌ தடவித்‌ தந்தார்கள்‌. (8)

'அடியே யசோதை! பகவானுடைய கருணையால்‌ காப்பாற்றப்பட்ட எனது பிள்ளையை இப்போது என்னிடம்‌ கொடு' என்று தங்கள்‌ தந்தையான நந்தகோபன்‌ தங்களைத்‌ தன்‌ மடியில்‌ எடுத்து வைத்துக்‌ கொண்டு, தங்கள்‌ சிறிய திருமேனியைத்‌ தழுவித்‌ தழுவி மயிர்க்கூச்செறிந்தார்‌. (9)

வண்டியில்‌ மறைந்திருந்து தங்களைக்‌ கொல்ல வந்த அஸுரனைத்‌ தாங்கள்‌
கொன்றுவிட்டீர்கள்‌ அல்லவா? அந்த அஸுரனது சாம்பற்பொடிக்கூடக்‌ காணப்படவில்லையே? அது எப்படி? அவன்‌ சுத்த ஸத்வரூபியான தங்களோடு இரண்டறக்‌ . கலந்துவிட்டான்‌ என்பதாலோ?

- அதன்பின்‌ நந்தகோபனால்‌ சிறப்புச்‌ செய்யப்பட்ட அந்தணர்கள்‌ தங்களுக்கு (இன்னல்கள்‌ நீங்குமாறு)- சிறந்த மங்கல வாழ்த்துக்களை நல்கினார்கள்‌. தாங்களோ தங்களது சிறுபிள்ளைவிளையாட்டினால்‌ கோகுலத்தையே மகிழ்ச்சியடையச்‌ செய்தீர்கள்‌. 
----------------------------
कदापि जन्मर्क्षदिने तव प्रभो निमन्त्रितज्ञातिवधूमहीसुरा ।
महानसस्त्वां सविधे निधाय सा महानसादौ ववृते व्रजेश्वरी ॥१॥
O Lord! Once on Thy birth star day, Yashoda, the queen of Vraja, who had invited the relatives and their wives and the Braahmins, for the occasion, placed Thee near a big cart and got busy in the kitchen organising the feast
----------------------
ततो भवत्त्राणनियुक्तबालकप्रभीतिसङ्क्रन्दनसङ्कुलारवै: ।
विमिश्रमश्रावि भवत्समीपत: परिस्फुटद्दारुचटच्चटारव: ॥२॥
Then from near Thee, was heard the fearful cries and confused voices of various boys who were appointed to protect Thee, which was mingled with the sound of the crackling and breaking sound of wood. 
-------------------------
ततस्तदाकर्णनसम्भ्रमश्रमप्रकम्पिवक्षोजभरा व्रजाङ्गना: ।
भवन्तमन्तर्ददृशुस्समन्ततो विनिष्पतद्दारुणदारुमध्यगम् ॥३॥
Then hearing the terrific sound, frightened, the Gopikas came running  heaving because of the effort and anxiety. They saw Thee lying amongst the frightful big pieces of broken wood strewn all around.   
--------------------------------
शिशोरहो किं किमभूदिति द्रुतं प्रधाव्य नन्द: पशुपाश्च भूसुरा: ।
भवन्तमालोक्य यशोदया धृतं समाश्वसन्नश्रुजलार्द्रलोचना: ॥४॥
Alas! What! What has happened to the child!' thus crying, Nanda, the Gopas and the assembled Braahmins rushed to the spot. Finding Thee in Yashoda's arms, they felt relieved and shed tears of joy seeing that the child was safe.
----------------------------------
कस्को नु कौतस्कुत एष विस्मयो विशङ्कटं यच्छकटं विपाटितम् ।
न कारणं किञ्चिदिहेति ते स्थिता: स्वनासिकादत्तकरास्त्वदीक्षका: ॥५॥
What ! What happened and how! This is a wonder! This huge cart is shattered! There seems to be no explanation for this', thus exclaiming, they looked at Thee, awestricken,
------------------------------------------------   
 कुमारकस्यास्य पयोधरार्थिन: प्ररोदने लोलपदाम्बुजाहतम् ।
मया मया दृष्टमनो विपर्यगादितीश ते पालकबालका जगु: ॥६॥
O Lord! The children who were guarding Thee, declared 'This child who was desirous of being breast fed, moved his lotus like legs, and hit the cart which overturned. I saw, even I saw.'  
---------------------------------------------------------

भिया तदा किञ्चिदजानतामिदं कुमारकाणामतिदुर्घटं वच: ।
भवत्प्रभावाविदुरैरितीरितं मनागिवाशङ्क्यत दृष्टपूतनै: ॥७॥
Then to the people who knew nothing of Thy prowess, the words of the frightened children were entirely baseless. But to those who knew of even a bit of Thy prowess and had witnessed the incident of Pootanaa, could not reject their statement altogether.  
------------------------------------------------------------
रवालताम्रं किमिदं पदं क्षतं सरोजरम्यौ नु करौ विरोजितौ।
इति प्रसर्पत्करुणातरङ्गितास्त्वदङ्गमापस्पृशुरङ्गनाजना: ॥८॥
Pink like tender leaves, these legs, have they been hurt? These hands, charming like the lotuses, have they been injured?' Thus with overflowing sympathy and moved with such concern, the women folk stroked Thy body gently. 
----------------------------------------------------------
अये सुतं देहि जगत्पते: कृपातरङ्गपातात्परिपातमद्य मे ।
इति स्म सङ्गृह्य पिता त्वदङ्गकं मुहुर्मुहु: श्लिष्यति जातकण्टक: ॥९॥
O Yashoda! Give me my son. By the Lord's showers of mercy today my son was saved!' Thus saying and collecting Thee in his arms, Thy father embraced Thee again and again, whose body was full of horripilation. 
--------------------------------------------------------
अनोनिलीन: किल हन्तुमागत: सुरारिरेवं भवता विहिंसित: ।
रजोऽपि नो दृष्टममुष्य तत्कथं स शुद्धसत्त्वे त्वयि लीनवान् ध्रुवम् ॥१०॥
The Asura who had come to kill Thee, disguised as a cart, was destroyed by Thee. But even a trace of his body or evil nature (Rajas) was not seen. How can that be? Certainly, he became pure (by coming in contact with Thee) and merged in Thy pure Sattvic Self.  
----------------------------------------------------------

प्रपूजितैस्तत्र ततो द्विजातिभिर्विशेषतो लम्भितमङ्गलाशिष: ।
व्रजं निजैर्बाल्यरसैर्विमोहयन् मरुत्पुराधीश रुजां जहीहि मे ॥११॥

The Braahmins who were invited and were well honoured specially conferred their auspicious blessings on Thee. With Thy captivating childish sweet ways, Thou delighted the whole of Vraja. O Lord of Guruvaayur! May Thou sheer away my sufferings.  
===========================================================
   








audio player