GOVARDHANA GIRIDHARI ( episode-63)


g
                                                    GOVARDHANA  GIRIDHARI
Rendition  by  Trisoor  Ramachandran
music  by  S.V.Venkataraman
தர்பார்   ராகம் 
mp3  contributed  by  C.Ramakrishnan----------------------------------------------------------------------------------
please listen using  the  audio  player  at  the end  of  this  page
------------------------------------------------------
THIS IS  TAMIL VERSION 62
--------------------------------------------

வஸுதேவர் மைந்தனே! ஒரு சமயம் கோபர்கள் (இந்திரனின்) வேள்விக்காகப் பொருட்களைச் சேகரிப்பதில் முனைந்திருப்பது கண்டு இந்திரனுடைய கர்வத்தைப் போக்கத் திருவுள்ளம் கொண்ட தாங்கள் அனைத்துமறிந்திருந்த போதிலும் (தங்களது தந்தையை அணுகி) அப்பா! நீங்கள் செய்யும் இத்தனை முயற்சிகளும் எதற்காக?' என்று நந்தகோபர் முதலிய கோபர்களைக் கேட்டீர்கள். 
இதைச் செவிமடுத்த நந்தகோபர், "குழந்தாய்! இந்திரனை மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இவ்வேள்வி செய்யப்படுகிறது. இந்திரன் மழையை அளித்து பூமியைச் செழிப்புறச் செய்கிறான். பூமியில் மனிதர்களின் வாழ்வு மழையைத்தானே அண்டி உள்ளது? முக்கியமாக நமக்கும் மழைதானே பிழைப்பு? ஏனெனில் பசுக்கள் புல்லையும், தண்ணீரையும் நம்பித்தானே பிழைக்கின்ற?" என்று கூறினார்.
குருவாயூரப்பா! தந்தையின் சொல்லைக் கேட்ட தாங்கள் மிகவும் இனிமையாகப் பேசத் தொடங்கினீர்கள். தந்தையே! இந்த எண்ணமே தவறு. இந்திரன் மழை பெய்விக்கிறான் என்பதே உண்மையன்று. பிராணிகளின் முற்பிறவி வினைப்பயனே (அதிர்ஷ்டமே) தேவையான மழையை அளிக்கிறது. பெரிய பெரிய காடுகளில் உள்ள மரங்கள் இந்திரனுக்காக என்ன பூஜை செய்கின்றன?  

 "இங்கு பசுக்கள்தான் நமது குலதனம் என்பது உண்மைதான். அவற்றின் பிழைப்புக்கு வேண்டிய புல், நீர் இவற்றை அளிப்பது இந்த கோவர்த்தன மலையே. ஆகவே அதற்குப் பூஜை செய்வது என்பதே சரி. இம்மண்ணுலகில் தேவர்களைக் காட்டிலும் மேம்பட்டவர்கள் அந்தணர்கள்தான். ஆகையால் அவர்களையும் பூஜிக்கலாம்" என்று தாங்கள் தங்களைச் சார்ந்தவர்களிடம் கூறினீர்கள். 
தாங்கள் கூறியதைக் கேட்ட கோபர்கள் மிகுந்த பக்தியுடன் அந்தணப் பெருமக்களைச் சிறப்பித்து கோவர்த்தன மலைக்கும் சிறந்த முறையில் பூஜை செய்தார்கள். மிகுந்த ஆதரவுடன் 
கிரிவலம் செய்து மேன்மேலும் வணங்கினார்கள். தாங்களும் மலை போன்று பெரிய உருவில் வெளிப்பட்டு இடையர்கள் எதிரில் அவர்கள் அளித்த நிவேதனம் முழுவதும் உண்டு களித்தீர்கள். 

பிறகு தாங்கள் அவர்களிடம் (பின்வருமாறு) கூறினீர்கள் - "(பெரியோர்களே!) நான் கூறியது பொய்யா? இம்மலையரசனே நம்முன் தோன்றி நாம் அளித்த நிவேதனங்களைச் சாப்பிடுகிறது பாருங்கள். மலைகளின் பகைவனான இந்திரன் சினங்கொண்டாலும் நம் எல்லோரையும் காப்பாற்றும் திறன் படைத்தது இம்மலை.'' இதைக் கேட்டு இடையர்கள் அனைவரும் மகிழ்ந்த னர்.
கோகுலவாசிகள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்துடன் தங்களைப் பின்பற்றி கோகுலத்திற்குத் திரும்பிச் சென்றனர். தேவேந்திரனோ தனது யாகம் தடுக்கப்பட்டதைக் கண்டு மிகுந்த கோபங்கொண்டு, தங்களது பெருமையை அறிந்திருந்தும், தங்களாலேயே இந்திரப் பதவி பெற்றிருந்தும் ரஜோ குணத்தால் மனங்கலங்கி இச்செயலைப் பொறுத்தானில்லை. (7)



 




அப்பொழுது கோகுலத்திற்கு மேல் எங்கும் கருமேகங்கள் சூழ்ந்தன. அந்த மேகங்கள் - தங்களது திருமேனியைப்போல் காணப்பட்டன. வானில் தொடர்ந்து உண்டான இடி முழக்கத்தால் அனைத்து திசைகளும் நடுங்கின. இவையனைத்தையும் தாங்கள் பார்த்தீர்கள் அல்லவா? (1)
 எவராலும் வெல்லப்பட முடியாத பகவானே! பெரிய பெரிய ஆலங்கட்டியுடன் எங்கும் இடைவிடாது மழை கொட்டியது. அதனால் துன்பமடைந்த கோபர்கள், கிருஷ்ணா! இந்திரனுடைய சினத்திலிருந்து எங்களைக் காப்பாற்று ! காப்பாற்று!' என்று அலற, அவர்களது கூக்குரலைக் கேட்ட தாங்கள் பயப்படாதீர்கள்' என்று அவர்களிடம் கூறினீர்கள்
இந்த நம் கோகுலத்திற்கு (பசுக் கூட்டங்களையும், நம்மையும் காப்பாற்றும் ) தெய்வம் - இந்த கோவர்த்தன மலைதான். மலைகளுக்குப் பகைவனான இந்திரனிடமிருந்து தோன்றும் நாசத்தை இந்தத் தெய்வம் கட்டாயம் தடுக்கும். இதில் உங்களுக்கு ஏன் சந்தேகம்?' என்று சிரித்துக் கொண்டே கூறிய தாங்கள், கோவர்த்தன மலையைத் தங்களது இளங்கைகளால் அடியோடு பிடுங்கித் தூக்கினீர்கள்.
அப்படி மேலே தூக்கப்பட்ட மலையின் கீழ்ப்பகுதியில் மணற்பாங்காகவும், மெதுவாகவும், பரவலாகவும் இருந்த இடத்தில் கோபர்களைத் தங்களது உடைமைகளுடனும், பசுக்களுடனும் தங்கச் செய்து, தாங்கள் தங்களது தாமரைக் கையால் மலையைத் தாங்கி நின்றீர்கள். மலை இருந்த இடத்தில் திட்டாக இருந்ததால் மழை வெள்ளம் தொலைவிலேயே தடுக்கப்பட்டு விட்டது.
தாங்கள் ஒரு கையால் மலையைத் தூக்கிக் கொண்டும், மற்றொரு கையால் அருகில் வந்த பசுக்களை சொறிந்து கொடுத்துக் கொண்டும், இடைப்பெண்களுடனும், நண்பர்களுடனும் அபிநயத்துடன் கேலிப் பேச்சுகள் பேசிக் கொண்டும் இருந்ததைக் கண்ட கோபர்கள் மிக்க மகிழ்ச்சி கொண்டனர். 
'இம்மலையோ மிகப் பெரியதாக உள்ளது. கிருஷ்ணனோ தாமரைப் போன்ற தனது இடது கையினால் அதை நெடுநேரமாகத் தாங்கி நிற்கிறான். இது என்ன வியப்பு! ஒருக்கால் இது மலையின் மகிமையாக இருக்குமோ!' என்று தங்களைப் பார்த்து கோபர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். 
 இதைக் கண்ட இந்திரன், 'இந்தச் சிறுவனுக்குத்தான் எவ்வளவு துணிவு? இவன் கை சோர்வுற்று (நிச்சயம்) மலையைக் கீழே போட்டுவிடுவான் என்று கர்வத்தால் நினைத்துத் தங்களிடத்தில் வெறுப்பு கொண்டு ஏழுநாட்கள் கடுமையாக மழை பெய்யச் செய்தான்
தேவதேவனே! தாங்கள் (அவ்வேழு நாட்களும் ) - நின்ற இடத்திலிருந்து ஓர் அடிகூட நகராது இருக்கையில் மழையெல்லாம் கொட்டித் தீர்ந்த மேகக் கூட்டங்கள் காற்றினால் - விரட்டியடிக்கப்பட்டன. அப்பொழுது வானவர்கோனான இந்திரன் தங்களிடம் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டான்
விபுவே! அந்த பெருத்த அடைமழை ஓய்ந்ததும் கோபர்களும், பசுக்கூட்டங்களும் - உணர்ந் (அங்கிருந்து) வெளியே வந்தனர். தாங்கள் அம்மலையை முன்பு போல் இருந்த இடத்திலேயே 
- கீரிடம் வைத்தீர்கள். இதைக் கண்ட கோபர்கள் பெருமகிழ்ச்சி கொண்டு தங்களைக் கட்டி அணைத்துக் கொண்டனர். 

"திருமகள் கேள்வனே! முன்பொரு சமயம் (வராஹ அவதாரத்தில்) தாங்கள் இப்பூமியையே தூக்கி இருக்கிறீர்கள். (அப்படியிருக்க) இச்சிறிய மலையைத் தூக்குவதில் தங்களுக்கு என்ன கஷ்டம்?" என்று தேவர்களனைவரும் தங்களைத் துதித்தனர்.
===============




-------------------------------------------------------------------



ददृशिरे किल तत्क्षणमक्षत-
स्तनितजृम्भितकम्पितदिक्तटा: ।
सुषमया भवदङ्गतुलां गता
व्रजपदोपरि वारिधरास्त्वया ॥१॥

At that moment, indeed, above the land of Vraja, were seen by Thee massive rain clouds continuously roaring and spreading. They caused all the quarters to tremble and they resembled Thy form in their brilliance. 
--------------------------------------------------------------
विपुलकरकमिश्रैस्तोयधारानिपातै-
र्दिशिदिशि पशुपानां मण्डले दण्ड्यमाने ।
कुपितहरिकृतान्न: पाहि पाहीति तेषां
वचनमजित श्रृण्वन् मा बिभीतेत्यभाणी: ॥२॥

There was torrential rain in all directions accompanied by huge enormous hail stones. The group of cowherds were tormented by the wrathful action of Indra. They all cried and prayed to be protected. O Invincible One! Hearing their laments , Thou asked them not to fear. 
-------------------------------------------------------
कुल इह खलु गोत्रो दैवतं गोत्रशत्रो-
र्विहतिमिह स रुन्ध्यात् को नु व: संशयोऽस्मिन् ।
इति सहसितवादी देव गोवर्द्धनाद्रिं
त्वरितमुदमुमूलो मूलतो बालदोर्भ्याम् ॥३॥

Here, for our clan, the mountain is the deity. Indra is the enemy of mountains. This mountain, Govardhan, will resist Indra's attack. Indeed what is your doubt in this?' Thou said so with a smile. O Lord! Assuring them, Thou quickly uprooted the Govardhana mountain with Thy two tender arms. 
---------------------------------------------------------------
तदनु गिरिवरस्य प्रोद्धृतस्यास्य तावत्
सिकतिलमृदुदेशे दूरतो वारितापे ।
परिकरपरिमिश्रान् धेनुगोपानधस्ता-
दुपनिदधदधत्था हस्तपद्मेन शैलम् ॥४॥

Then Thou held aloft the lifted up mountain with Thy lotus like arm. The soft sand bed of the mountain was well protected from the rain water. The cows and cowherds all gathered under the uplifted mountain along with their belongings and were also well protected.
---------------------------------------------------------------
भवति विधृतशैले बालिकाभिर्वयस्यै-
रपि विहितविलासं केलिलापादिलोले ।
सविधमिलितधेनूरेकहस्तेन कण्डू-
यति सति पशुपालास्तोषमैषन्त सर्वे ॥५॥

 As Thou were holding the mountain, Thou enthusiastically engaged the girls and boys of Thy age group in playful conversation. The cows gathered around Thee and Thou caressed them with one hand. The cowherds were all very satisfied and delighted. 
-----------------------------------------------------------------
अतिमहान् गिरिरेष तु वामके
करसरोरुहि तं धरते चिरम् ।
किमिदमद्भुतमद्रिबलं न्विति
त्वदवलोकिभिराकथि गोपकै: ॥६॥

This mountain is so huge. Yet he is holding it in his left hand which is tender like a lotus stalk, for long. What a marvel! Is it that it is the power of the mountain to have lifted itself up?' The Gopas who were Thy onlookers commented thus. 
----------------------------------------------------------------------
अहह धार्ष्ट्यममुष्य वटोर्गिरिं
व्यथितबाहुरसाववरोपयेत् ।
इति हरिस्त्वयि बद्धविगर्हणो
दिवससप्तकमुग्रमवर्षयत् ॥७॥

Oh! The arrogance of this small boy! When his hands pain by the weight of the mountain, he will put it back in place.' Saying so Indra who was full of contempt for Thee poured rain heavily for seven days. 
-----------------------------------------------------------------------------------
अचलति त्वयि देव पदात् पदं
गलितसर्वजले च घनोत्करे ।
अपहृते मरुता मरुतां पति-
स्त्वदभिशङ्कितधी: समुपाद्रवत् ॥८॥

Thou had not stirred one step from Thy place. All the clouds were drained and exhausted of their waters. They were drifted away and scattered by the winds. Noticing all this, the head of the gods, Indra was scared of Thy might and fled. 
------------------------------------------------------------------------
शममुपेयुषि वर्षभरे तदा
पशुपधेनुकुले च विनिर्गते ।
भुवि विभो समुपाहितभूधर:
प्रमुदितै: पशुपै: परिरेभिषे ॥९॥

The heavy rain had then subsided and the cows and cowherds had come out from under the mountain. O Lord! Thou then replaced the mountain on the earth and were embraced by the overjoyed cowherds
-----------------------------------------------------
धरणिमेव पुरा धृतवानसि
क्षितिधरोद्धरणे तव क: श्रम: ।
इति नुतस्त्रिदशै: कमलापते
गुरुपुरालय पालय मां गदात् ॥१०॥

O Consort of Laxmi! The gods praised Thee saying that long ago (in the incarnation of a Boar) Thou had lifted up the whole earth itself. Lifting up the mountain was not much of an effort for Thee.       
============================================================= 
    


rkg

audioplayer