KAMSA VADHAM - ( episode- 75)

                                                                   கம்ச வதம் 
------------------------------------------------------------------------------------------------------------------
ராகம் சங்கராபரணம் 
ragam sankarabaranam
-------------------------------------
Please  download, listen, share  and  preserve  the  song
rendered  by  Trisoor  Ramachandran
( placed  in public  domian  by  SAREGAMA)
-----------------------------------
mp3  contributed  by  C.Ramakrishnan----------------------------------


please listen using  the  audio  player  at  the end  of  this  page



http://www.mediafire.com/file/99wy8i0bctnceqg/DASAKAM_75.mp3/file

---------------------------------------------------


மறுநாட்காலையில் பயம் கொண்ட கம்ஸனது கட்டளையால் 'மல்லர்களின் போட்டி விழா - தொடங்குவது பற்றி முரசு அறைவிக்கப்பட்டது. குழுமியிருந்த மன்னர்கள் தங்கள் தங்கள் - இருக்கையில் வந்து அமர்ந்தனர். நந்தகோபனும் பார்வையாளர்களிடையே உயர்ந்த இடத்தில் அமர்ந்தார். கம்ஸன் அரண்மனை மேல் மாடியில் (உப்பரிக்கையில்) வந்தமர்ந்தான். அப்பொழுது - தாங்கள் நன்கு அலங்கரித்துக் கொண்டு பலராமனுடனும், மற்ற நண்பர்களுடனும் அரங்கத்தின் - வாயிலை வந்து அடைந்தீர்கள்.
(ஆனால்) அங்கு குவலயாபீடம்' என்கிற யானை மிகவும் சினம் கொண்டு வாயிலை மறைத்து நின்றது


- (அப்பொழுது) அடே பாவி! வழியை விட்டு விலகிச் செல்! உம். சீக்கிரம்' என்று - தங்களால் ஏவப்பட்ட கொடியோனான மாவுத்தன் மிக்க சினம் கொண்டு யானையைத் தூண்ட அது - மிகவும் வேகத்தோடு தங்களைப் பிடித்துக் கொண்டது. (ஆனால்) தாங்கள் விளையாட்டாகவே (எளிதாகவே) அதன் பிடியிலிருந்து தப்பி பருத்திருந்த அந்த யானையின் மந்தகத்தில் ஓங்கியடித்துவிட்டு அதன் கால் இடுக்கில் ஒளிந்து கொண்டீர்கள். பின் கேலியாகச் சிரித்துக் கொண்டே வெளியே வந்தீர்கள்
முனிவர்களும்கூடத் தியான யோகத்தினால் தங்களைப் பற்ற முடியாது இருப்பதுபோல, யானையின் துதிக்கைக்கெட்டினாற்போலத் தாங்கள் அருகிலிருப்பினும், அதனால் பற்ற முடியவில்லை. இவ்வாறு அதன் எதிரில் ஓடி விளையாடிய தாங்கள் தரையில் தானாகவே கீழே விழ, தங்களை நோக்கிப் பாய்ந்த அந்த யானையின் உயிரோடு, தந்தத்தையும் வேருடன் பிடுங்கினீர்கள். அத்தந்தங்களின் அடிவேரில் இருந்த விலையுயர்ந்த நன்முத்துக்களையெல்லாம் எடுத்துத் தங்கள் நண்பனிடம் கொடுத்து, 'இம்முத்துக்களால் அழகாக ஒரு மாலை தொடுத்து ராதிகைக்குக் கொடு' என்று கூறினீர்கள். 
 பிறகு தாங்கள் தந்தத்தைத் தோளில் சாத்திக் கொண்டு பலராமனுடன் மல்ல அரங்கத்தில் புகுந்த போது அங்கிருந்த மக்கள் தங்களது அழகான திருமேனியைக் கண்டு கண்ணும், மனமும் கவரப் பெற்றுக் களிப்புற்றார்கள். "ஆஹா! (இவனது தந்தையான) நந்தனன்றோ பெரும் பேறுடையவன். இல்லை இல்லை! கோபியர்கள்தான் பெரும் புண்ணியம் செய்தவர்கள். இல்லையே! இவனைப் பெற்ற வயிறுடைய யசோதையன்றோ நோன்பு நோற்றவள். இல்லை இல்லை! இவனைக் காணும் பேறு பெற்ற நாமன்றோ மூவுலகிலும் சிறந்த பாக்கியசாலிகள்" என்று அனைவரும் புகழ்ந்து கொண்டார்கள். 
பிறகு அரசனது ஏவலால் மற்போரில் கைதேர்ந்த சாணூரன் தங்களையும், முஷ்ட யுத்தத்தில் சிறந்த முஷ்டிகன் பலராமனையும் எதிர்த்தனர். சட சட' என்ற பேரிரைச்சலோடு அவர்கள் ஒருவருக்கொருவர் முஷ்டியால் குத்திச் சண்டையிட்டனர். உந்தியெறிதல், கீழே தள்ளுதல், பிடித்திழுத்தல் போன்று பல வகைகளில் மற்போர் நடந்தது. அதில் மற்போரில் - வல்ல சாணூரன் மரணமடையும் முன்பே பல தடவை பந்த மோக்ஷங்களை (தங்கள். கையால் கட்டப்படுவதையும், விடுபடுவதையும்) அடைந்தான். அதுவன்றோ வியப்பு!
-----------------------------------------------------------------------
'இதென்ன அநியாயம் குழந்தைகளோ மென்மையான உடல் படைத்தவர்கள், மற்போர் வீரர்களோ உறுதி படைத்த உடம்புடையவர்கள். இதை நாம் பார்க்கக் கூடாது. வாருங்கள் - சீக்கிரம் போகலாம்' என்று (அங்குள்ள) மக்கள் (ஒருவர்க்கொருவர்) பேசிக் கொண்டிருக்கையில் தாங்கள் சாணூரனைக் கைகளால் (உயரத் தூக்கிப் பிடித்து வேகமாகச் சுற்றவே அவனும் - உயிரிழந்தான். அவனைத் தரையில் ஓங்கியறைந்தீர்கள். பலராமனும் வேகமாக முஷ்டிகனைத் துகைத்துக் கொன்றார். எஞ்சியிருந்த மல்ல வீரர்கள் ஓட்டம் பிடித்தனர்.
உடனே தீயபுத்தி கம்ஸன், தூர்யம் என்னும் பறை அறைவதை நிறுத்தச் சொல்லி செய்வதறியாது திகைத்து, பெரியோர்களான உக்ரஸேனர், வஸுதேவர். நந்தன் -முதலியோர்களைக் கொல்லவும், எங்கும் நிறைந்த (பரம்பொருளான) தங்களைத் தொலைவில் - துரத்தச் சொல்லியும் கட்டளையிட்டான். கொடியோனான அவனது சொற்களைக் கேட்டு மிக்க கோபமடைந்த தாங்கள், கருடன் மலையை நோக்கிப் பாய்வது போல கம்ஸன் உட்கார்ந்திருக்கும் - சிம்மாஸனத்தை நோக்கிப் பாய்ந்தீர்கள். உருவிய வாளை அவன் உயரத் தூக்கி வீசிக் - கொண்டிருந்ததால் பற்ற முடியாது இருப்பினும், அவனை வலுவில் கைப்பற்றினீர்கள். (8) 
உடனே தாங்கள் அவன் மேல் குதித்துத் தரையில் தள்ளி அவனது மூட்டுகள் - நொறுங்கும்படிச் செய்தீர்கள். தேவர்கள் தங்கள் மேல் மலர்மாரி பொழிந்தனர். என்னதான் - சொல்வோம்? பயத்தால் எப்பொழுதும் தங்களையே நினைந்திருந்து அவன் ஸாயுஜ்ய முக்தியடைந்தான். பரமனே, குருவாயூரப்பா முற்பிறவியில் அவன் காலநேமியாக இருந்து - தங்களால் கொல்லப்பட்டதன் விளைவே இது. அல்லவா?
பிறகு தாங்கள் அந்த கம்ஸனின் எட்டு தம்பிகளையும் கொன்று விரைவாகச் சென்று தாய் - தந்தையர்களை வணங்கி உக்ரஸேனரை மன்னராக முடிசூட்டினீர்கள். யதுகுலத்தோர் அனைவரும் விரும்பியதையளித்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினீர்கள். தேவகுருவான வியாழ பகவானிடம் அறநூல்களைக் கற்றவரும், பக்தர்களில் சிறந்தவருமான உத்தவரை நண்பராகப் பெற்று மிகவும் மகிழ்ச்சி கொண்டீர்கள். மதுரையிலேயே வசிக்கவும் தொடங்கினீர்களே





 ----------------------------------------------------------------------------------------------
प्रात: सन्त्रस्तभोजक्षितिपतिवचसा प्रस्तुते मल्लतूर्ये
सङ्घे राज्ञां च मञ्चानभिययुषि गते नन्दगोपेऽपि हर्म्यम् ।
कंसे सौधाधिरूढे त्वमपि सहबल: सानुगश्चारुवेषो
रङ्गद्वारं गतोऽभू: कुपितकुवलयापीडनागावलीढम् ॥१॥


Early the next morning, the frightened king Kansa commanded the commencement of the wrestling by the beating of the drums. The assembly of the kings ascended their respective seats to witness the wrestling. Nandagopa had also gone to the palace, and Kansa had also climbed to the top balcony of his palace. Thou along with Balaraama and Thy friends, dressed attractively approached the gates of the arena which was obstructed by the angered great elephant Kuvalayaapeeda.  
-----------------------------------------------------------------------------------------
पापिष्ठापेहि मार्गाद्द्रुतमिति वचसा निष्ठुरक्रुद्धबुद्धे-
रम्बष्ठस्य प्रणोदादधिकजवजुषा हस्तिना गृह्यमाण: ।
केलीमुक्तोऽथ गोपीकुचकलशचिरस्पर्धिनं कुम्भमस्य
व्याहत्यालीयथास्त्वं चरणभुवि पुनर्निर्गतो वल्गुहासी ॥२॥ 

Thou said 'O wicked one move away from the way quickly'. At this the cruel and angry minded mahout prompted the elephant, who taking great speed caught Thee in its tusks. As though in play Thou released Thyself and struck a blow on the elephant's bulging forehead . Thou then hid between the elephant's legs for sometime and then came out smiling sweetly. 
 ------------------------------------------------------------------
हस्तप्राप्योऽप्यगम्यो झटिति मुनिजनस्येव धावन् गजेन्द्रं
क्रीडन्नापात्य भूमौ पुनरपिपततस्तस्य दन्तं सजीवम् ।
मूलादुन्मूल्य तन्मूलगमहितमहामौक्तिकान्यात्ममित्रे
प्रादास्त्वं हारमेभिर्ललितविरचितं राधिकायै दिशेति ॥३॥


To the sages who meditate, just as Thou seem to be in their grasp but suddenly elude them, so also Thou escaped even when Thou were in the grasp of the elephant, running away just when it seemed to catch hold of Thee. Thou then playfully threw him on the ground. As he again rushed towards Thee, Thou pulled out its tooth from the root of its tusk. From there emerged priceless large pearls which Thou gave to Thy friend asking him to get them made into a beautiful necklace and give it to Raadhaa.  
---------------------------------------------------------------------
गृह्णानं दन्तमंसे युतमथ हलिना रङ्गमङ्गाविशन्तं
त्वां मङ्गल्याङ्गभङ्गीरभसहृतमनोलोचना वीक्ष्य लोका: ।
हंहो धन्यो हि नन्दो नहि नहि पशुपालाङ्गना नो यशोदा
नो नो धन्येक्षणा: स्मस्त्रिजगति वयमेवेति सर्वे शशंसु: ॥४॥ 


O Lord! Carrying the tusk on the shoulder, as Thou entered the arena with Balaraama, everyone's eyes and minds were forcefully drawn towards Thy auspicious form.The people exclaimed 'O fortunate indeed is Nanda, no no the Gopikaas, no Yashodaa, no no we the onlookers are fortunate, we alone are fortunate indeed in the three worlds.' Thus everyone declared.  
------------------------------------------------------------------------------
 पूर्णं ब्रह्मैव साक्षान्निरवधि परमानन्दसान्द्रप्रकाशं
गोपेशु त्वं व्यलासीर्न खलु बहुजनैस्तावदावेदितोऽभू: ।
दृष्ट्वऽथ त्वां तदेदंप्रथममुपगते पुण्यकाले जनौघा:
पूर्णानन्दा विपापा: सरसमभिजगुस्त्वत्कृतानि स्मृतानि ॥५॥


Not many people had the knowledge that Thou who shone and lived among the Gopas were Brahman incarnate and the essence of Supreme Bliss and Pure consciousness, free from all limitations. For many of them the auspicious time had arisen that they saw Thee for the first time and were full of bliss and became free from sin and joyfully narrated Thy deeds which they remembered.  
--------------------------------------------------------------------------

चाणूरो मल्लवीरस्तदनु नृपगिरा मुष्टिको मुष्टिशाली
त्वां रामं चाभिपेदे झटझटिति मिथो मुष्टिपातातिरूक्षम् ।
उत्पातापातनाकर्षणविविधरणान्यासतां तत्र चित्रं
मृत्यो: प्रागेव मल्लप्रभुरगमदयं भूरिशो बन्धमोक्षान् ॥६॥

At the king's command the champion wrestler Chaanoor and the boxer Mushtika attacked Thee and Balaraama. There were mutual and loud and fierce blows of fists, throwing up, pushing down and dragging and various such methods of fight were used. What a wonder it is that the leading wrestler Chaanoor, even before his death attained bondage and release many times at Thy hands.  
----------------------------------------------------------------------------

हा धिक् कष्टं कुमारौ सुललितवपुषौ मल्लवीरौ कठोरौ
न द्रक्ष्यामो व्रजामस्त्वरितमिति जने भाषमाणे तदानीम् ।
चाणूरं तं करोद्भ्रामणविगलदसुं पोथयामासिथोर्व्यां
पिष्टोऽभून्मुष्टिकोऽपि द्रुतमथ हलिना नष्टशिष्टैर्दधावे ॥७॥


Alas! How bad! The two boys are tender bodied and the two wrestlers are tough. We will go away quickly and not see this unequal contest,' thus the people were talking among themselves. Just then Thou caught hold of Chaanoor's arm and whirled him round and round and threw him dead on the ground. Mushtika was also quickly crushed to death by Balaraama. The remaining wrestlers ran away out of fear.
---------------------------------------------------------------------------- 

कंस संवार्य तूर्यं खलमतिरविदन् कार्यमार्यान् पितृंस्ता-
नाहन्तुं व्याप्तमूर्तेस्तव च समशिषद्दूरमुत्सारणाय ।
रुष्टो दुष्टोक्तिभिस्त्वं गरुड इव गिरिं मञ्चमञ्चन्नुदञ्चत्-
खड्गव्यावल्गदुस्संग्रहमपि च हठात् प्राग्रहीरौग्रसेनिम् ॥८॥

Kansa asked for the drums to be stopped. Then the wicked one not knowing what to do ordered for Thy respected parents to be killed. O Omnipresent Lord! He also ordered that Thou be driven away to a remote place. Thou were very annoyed at his wicked words. Thou leaped with determination to the throne of Kansa to the highest balcony of his palace, like a Garuda ascends to the top of the mountain, and gripped him, the son of Ugrasena, though he was difficult to catch hold of because he resisted with brandishing a sword.  
----------------------------------------------------------------------

सद्यो निष्पिष्टसन्धिं भुवि नरपतिमापात्य तस्योपरिस्टा-
त्त्वय्यापात्ये तदैव त्वदुपरि पतिता नाकिनां पुष्पवृष्टि: ।
किं किं ब्रूमस्तदानीं सततमपि भिया त्वद्गतात्मा स भेजे
सायुज्यं त्वद्वधोत्था परम परमियं वासना कालनेमे: ॥९॥


Immediately crushing his joints Thou hurled the king on the ground and jumped on his body. At that very moment the gods in heaven showered flowers on Thee. What shall I say! O Supreme Being! Though Kansa always remembered Thee out of fear, he attained union with Thee as a result of Thou killing him. This was due to his vaasanaa (past life's tendency) as Kaalanemi (in his previous birth) who was killed by Thee.  
----------------------------------------------------------------

तद्भ्रातृनष्ट पिष्ट्वा द्रुतमथ पितरौ सन्नमन्नुग्रसेनं
कृत्वा राजानमुच्चैर्यदुकुलमखिलं मोदयन् कामदानै: ।
भक्तानामुत्तमं चोद्धवममरगुरोराप्तनीतिं सखायं
लब्ध्वा तुष्टो नगर्यां पवनपुरपते रुन्धि मे सर्वरोगान् ॥१०॥

Quickly then Thou killed Kansa's eight brothers. Prostrating before Thy parents, Thou made Ugrasena the king and made the whole Yaadava clan greatly happy by giving them what they desired. Thou then got Uddhava as friend who was the greatest of devotees and had received instructions into the laws of ethics from the preceptor of gods, Brihaspati. Thou resided in the capital with satisfaction. O Lord of Guruvaayur! deign to remove all my afflictions.  
=======================================================




 


   

rkg

audioplayer