VISWA ROOPA PRASADA VARNANAM - episode-46




Trisoor Ramachanfran (  public  domain  by SAREGAMA)
( mp3  contributed  by  C.Ramakrishnan)
please listen using  the  audio  player  at  the end  of  this  page 

RAGAM -  LALITHA PANCHAMAM (MAYAMALAVAGOWLA ?)
----------------------------------------------------------------------------------- 
லலித பஞ்சமம்  ராகம்
--------------------------------------------------------------------------



46
தேவதேவனே! முன்பொரு சமயம்‌ தாங்கள்‌ யசோதையின்‌ மடியில்‌ மல்லாந்து படுத்துப்‌ பால்‌ அருந்திக்‌ கொண்டிருந்தபோது கொட்டாவி வரவே வாயைத்‌ திறந்தீர்கள்‌. அப்போது தங்களது திறந்த வாயில்‌ உலகமனைத்தையும்‌ யசோதை கண்டாளல்லவா? (1)

உலக நாயகனே! வேறொரு சமயம்‌ தாங்கள்‌ மற்ற இடைச்சிறுவர்களுடன்‌ பழங்களைப்‌ பறித்து விளையாடுகையில்‌, அவர்கள்‌ சேர்த்து வைத்திருந்த பழங்களை நீங்கள்‌ ஏமாற்றி எடுத்துக்‌ கொண்டதால்‌ சினம்‌ கொண்ட அக்குழந்தைகள்‌ நீங்கள்‌ மண்‌ தின்றதாக உங்கள்‌ தாயிடம்‌ கோள்‌ சொன்னார்களாமே! (2)

நிலம்‌, நீர்‌ முதலிய ஐம்பெரும்‌ பூதங்களை முற்றுமாக பிரளய காலத்தில்‌ விழுங்குகின்ற பிரபுவே! மண்ணைத்‌ தின்றதால்‌ தங்களுக்கு நோய்‌ வருமே என்று பயந்த தங்கள்‌ தாய்‌ யசோதை கோபம்‌ கொண்டாள்‌. (இவ்வாறு கேட்கலானாள்‌.) (3)

'அடே! அடங்காத பயலே! குழந்தாய்‌! நீ மண்‌ தின்றாயா என்ன? சொல்‌!என்று (உன்‌) தாயார்‌ மிரட்டிக்‌ கேட்டபோது, பிரபுவே! நீங்கள்‌ வெகுநேரம்‌ சிரித்துவிட்டு (அவர்கள்‌ கூறியது) 'பொய்‌' என்று சத்தியம்‌ செய்தீர்களாமே! (4)

அப்போது உங்கள்‌ தாய்‌, அடே! எல்லோரும்‌ நீ மண்‌ தின்றதாக உறுதியாகக்‌ கூறுகின்றார்களே! நீ அதை ஒப்பவில்லை எனில்‌ உன்‌ வாயைத்‌ திறந்து காட்டு' என்று அதட்டினாள்‌. அப்போது நீங்கள்‌ மலர்ந்த தாமரை போன்ற திருவாயைத்‌ திறந்து காட்டினீர்கள்‌. (5)

தங்கள்‌ திருவாயில்‌ சிறிதளவாவது மண்‌ இருக்கும்‌ என்று எதிர்பார்த்திருந்த அந்தத்‌ தாயை மிகவும்‌ மனநிறைவு கொள்ளச்‌ செய்பவர்‌ போல்‌, இம்மண்ணுலகு மட்டுமின்றி அனைத்து உலகங்களையும்‌ (தங்கள்‌ திருவாயில்‌) காண்பித்தீர்கள்‌. (6).

அப்பொழுது தங்கள்‌ திருவாயில்‌ ஓரிடத்தில்‌ காடுகளையும்‌, ஓரிடத்தில்‌ கடல்களையும்‌, வேறொரு இடத்தில்‌ ஆகாயத்தையும்‌, மற்றுமோரிடத்தில்‌ பாதாள உலகையும்‌, சில இடங்களில்‌ - மனிதர்கள்‌, அரக்கர்கள்‌, தேவர்கள்‌ என்றிவ்வாறு (தங்கள்‌ தாய்‌) எதைத்தான்‌ காணவில்லை? (அதாவது அனைத்துப்‌ பிரம்மாண்டங்களையும்‌ கண்டாள்‌ என்றபடி.) (7)

குவாயூரப்பா! தங்கள்‌ தாயார்‌ . தங்கள்‌ திருவாயில்‌ தங்களைத்‌ திருப்பாற்கடலில்‌ பள்ளிகொண்ட பிரானாகவும்‌, பரமபதத்தில்‌ வீற்றிருக்கும்‌ வைகுண்டநாதனாகவும்‌, தனக்கு முன்‌  தன்‌ பிள்ளையாக நிற்பதையும்‌ கண்டாள்‌. இப்படி எத்தனை எத்தனை விதமாகத்தான்‌ தங்களைக்‌ கண்டாளோ! (அதாவது தங்களது பல வடிவுகளையும்‌ கண்டாள்‌.) (8)



தங்கள்‌ திருவாயினுள்ளே புவனங்களெல்லாம்‌ காண்கையில்‌ அதில்‌ மேலும்‌ இன்னொரு முகம்‌, வாய்‌ மற்றும்‌ புவனங்கள்‌, மறுபடியும்‌ அதனுள்‌ இன்னொரு முகம்‌, வாய்‌, புவனங்கள்‌ என்றிப்படி (ஒன்றுக்கு மேல்‌ மற்றொன்று என்று கண்ணாடிக்குள்‌ கண்ணாடி காண்பதுபோல்‌) வரிசை வரிசையாக யசோதை கண்டாள்‌. இவ்வாறு உலகின்‌ எல்லையற்ற தன்மையை காட்டியருளினீர்கள்‌. ப (9)

விந்தையான குழந்தை வடிவிலே தோன்றிய குருவாயூரப்பா! (இவ்வாறான காட்சியைக்‌ கண்ட) யசோதை 'ஸத்‌ சித்‌ ஆனந்த உருவனான பரப்பிரம்மமே தனக்குக்‌ குழந்தையாகப்‌ பிறந்துள்ளான்‌' என்ற உண்மையை அறிந்தாள்‌. ஆனால்‌ சிறிது நேரத்திலேயே தாங்கள்‌ அவளைப்‌ புத்திர வாத்ஸல்யத்தினால்‌ மோகமடைய (மயங்க) செய்து 'அம்மா! பால்‌ தாருங்கள்‌' என்று அவள்‌ மடியில்‌ ஏறி அமர்ந்தீர்கள்‌. அத்தகைய தாங்கள்‌ என்னைக்‌ காத்தருள வேண்டுகிறேன்‌. (10)










-------------------------------------------------------------------------
अयि देव पुरा किल त्वयि स्वयमुत्तानशये स्तनन्धये ।
परिजृम्भणतो व्यपावृते वदने विश्वमचष्ट वल्लवी ॥१॥
O Lord! Once long ago, as Thou were lying flat on the back, in the lap of Yashodaa and sucking at her breast, Thou yawned. As Thou did so, in Thy open mouth, Thou revealed to her the whole universe.
-------------------------------------------------------------------------
पुनरप्यथ बालकै: समं त्वयि लीलानिरते जगत्पते ।
फलसञ्चयवञ्चनक्रुधा तव मृद्भोजनमूचुरर्भका: ॥२॥
O Lord of the Universe! Again once, as Thou were playing with other children, Thou cheated them in collecting fruits. Angered at this, they reported to Thy mother that Thou had eaten mud.
------------------------------------------------------------------------
अयि ते प्रलयावधौ विभो क्षितितोयादिसमस्तभक्षिण: ।
मृदुपाशनतो रुजा भवेदिति भीता जननी चुकोप सा ॥३॥
O Lord! At the time of the deluge Thou do consume everything earth water etc. Yet Thy mother was frightened that Thou may fall sick by eating mud and so she became angry.
-----------------------------------------------------------------------
अयि दुर्विनयात्मक त्वया किमु मृत्सा बत वत्स भक्षिता ।
इति मातृगिरं चिरं विभो वितथां त्वं प्रतिजज्ञिषे हसन् ॥४॥
O you naughty one! Is it that you have eaten mud O son!' O Lord! These words of Thy mother, for a long time, Thou kept on denying and laughingly asserted that Thou had not done so.
---------------------------------------------------------------------
अयि ते सकलैर्विनिश्चिते विमतिश्चेद्वदनं विदार्यताम् ।
इति मातृविभर्त्सितो मुखं विकसत्पद्मनिभं व्यदारय: ॥५॥
O Boy! If you deny what all the others are saying, please open your mouth.' Thus reprimanded by Thy mother, Thou opened Thy mouth as a lotus in full bloom.
--------------------------------------------------------------------
अपि मृल्लवदर्शनोत्सुकां जननीं तां बहु तर्पयन्निव ।
पृथिवीं निखिलां न केवलं भुवनान्यप्यखिलान्यदीदृश: ॥६॥
Thy mother was eager to see just a trace of mud in Thy mouth. As though to please her, and to give her abundant satisfaction Thou showed her in Thy mouth not only this whole earth but the entire universe.
-------------------------------------------------------------------
कुहचिद्वनमम्बुधि: क्वचित् क्वचिदभ्रं कुहचिद्रसातलम् ।
मनुजा दनुजा: क्वचित् सुरा ददृशे किं न तदा त्वदानने ॥७॥
At that time, in Thy mouth what not was seen by Yashodaa? Somewhere the forests and oceans, somewhere the skies and Rasaatala, human beings and demons, gods and devas!
-------------------------------------------------------------------
कलशाम्बुधिशायिनं पुन: परवैकुण्ठपदाधिवासिनम् ।
स्वपुरश्च निजार्भकात्मकं कतिधा त्वां न ददर्श सा मुखे ॥८॥
Yashodaa saw in Thy mouth the recliner in the milk ocean. Again she saw Paramaatamaa, the resident of the Vaikunth abode. Then she saw Thee as her son in front of her. In how many different ways did she not see Thee.
------------------------------------------------------------------

विकसद्भुवने मुखोदरे ननु भूयोऽपि तथाविधानन: ।
अनया स्फुटमीक्षितो भवाननवस्थां जगतां बतातनोत् ॥९॥
In the cavity of Thy mouth she saw all the worlds, where even Thou were present with Thy mouth open, once again, in which again all the worlds were seen; and so on endlessly. This definitely expounded Thou as the infinitude of the universe.
---------------------------------------------------------------------
धृततत्त्वधियं तदा क्षणं जननीं तां प्रणयेन मोहयन् ।
स्तनमम्ब दिशेत्युपासजन् भगवन्नद्भुतबाल पाहि माम् ॥१०॥
At that time for a moment, Yashodaa had a flash of illumination. Thou with affection deluded her and clung to her, calling her 'Mother' and demanded to be suckled. O Lord! Thou the Wondrous Child! Deign to protect me.
==============================================================
 

     
 
 

audioplayer