RAMAAYANAM-PART-1 (EPISODE-34)

RAMA AVATHAARAM-1
-------------------------------------------------------------------------------------------
RAGAM - SARANGA

please listen using  the  audio  player  at  the end  of  this  page


    34- ராம  அவதாரம்- ( முதல் பகுதி)
------------------------------------
34-1
தேவர்கள், ராவணனை வதைக்க வேண்டி ஸ்ரீ ஹரியை  வேண்டிக்கொண்டனர்.
கோசல தேசத்தில், ருஷ்யஸ்ருங்க முனிவர்  தசரதனுக்காக புத்ர காமேஷ்டி யாகம் செய்தார். அதில்  கிடைத்த உயர்ந்த பாயசத்தை தசரதனுக்கு அளித்தார். அதை அருந்திய தசரதனின் பட்ட மஹிஷிகள் மூவரும், ஒரே  சமயத்தில்,  கருவுற்றனர். அந்த   மூன்று  அரசிகளிடமும், ஸ்ரீ   ஹரியே , பரதனோடும், லக்ஷ்மணனோடும்,சத்ருக்னனோடும்,  ஸ்ரீ  ராமனாக  அவதாரம் செய்தார்.

34-2
தந்தையின் கட்டளைப்படி, விசுவாமித்திரரின் வேள்வியைக் காக்க ,வில் ஏந்தி, லக்ஷ்மணன்  , பின் தொடர ,சென்றீர்கள். முனிவரான விசுவாமித்திரர் உபதேசித்த  மந்திரங்களால், வழி நடந்த களைப்பை போக்கிக்கொண்டீர்கள்.
மக்களைக் காக்கும் பொருட்டு ,முனிவரின்  சொற்படி, தாடகையை  வதம்
 செய்தீர்கள்.  அவரிடமிருந்து பல அஸ்திரங்களை உபதேசமாகப்  பெற்று,
'சித்தாஸ்ரமம் '  என்ற பெயர் கொண்ட  முனிவர்களின் தபோவனம்  சென்று அடைந்தீர்கள்

34-3
 வேள்வியின் தொடக்கத்தில் பாணங்களால் மாரீசனை விரட்டி அடித்து, மற்ற அரக்கற்களைக் கொன்று விட்டு, ஜனகரின் ராஜ்ஜியம் செல்லும் வழியில், தங்களது பாத  தூளியால், அஹல்யைக்கு   தூய்மை அளித்து, விதேஹ மன்னரின் அரண்மனையை அடைந்தீர்கள்  அங்கு சிவபெருமான் வில்லை முறித்து ,ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அம்சமான சீதா பிராட்டியை  மணந்து, வீரர்களான தங்களது  சகோதரர்கள் மூவருடனும், அவர்களுடைய மனைவிமார்களுடனும், அயோத்திக்கு திரும்பினீர்கள் .
34-4
   பரசுராமர் தங்களை  வழிமறித்து,  அவருடைய  தவப் பயனை  தங்களுக்கு  அர்ப்பணம் செய்து அகன்ற  பிறகு, அயோத்தியை  அடைந்தீர்கள். அங்கு  மனையாலான்  சீதையுடன் இனிதே  வாழ்ந்தீர்கள். பின்னர் ஒரு  சமயம், பரதனும் சத்ருகனனும் , தங்களது  மாமன் ராஜ்யத்திற்கு  சென்றிருந்த போது தங்களது  தந்தை தசரதன் ,  தங்களுக்கு  முடிசூட்ட  ஏற்பாடு செய்ய தொடங்கியபோது, கேகய மன்னன் புதல்வி  கைகேயினால்  தடுக்கப்பட்டது.
34-5
  தந்தை சொற்படி,   வில்லை கையிலேந்தி,  தம்பியுடனும், மனையாளுடனும், வனவாசம் புக தாங்கள் கிளம்பியபோது, உடன் வந்த நகர மக்களை திருப்பி அனுப்பிவிட்டு, குகன் இருக்குமிடம் அடைந்து, சடையும் மரவுரியும் தரித்து கங்கையைத் தோணி கொண்டு கடந்தீர்கள்.  வழியில் பரத்வாஜ  முனிவரைக்கண்டு வணங்கி   அவரது சொற்படி, சித்ரகூட மலை சென்று அங்கு இன்பமாக  வசித்தீர்கள்

34-6
 தங்களது  தந்தை   உங்களது பிரிவைத் தாங்கமுடியாமல் உயிர் துறந்தது பற்றி பரதன்  மூலம்  அறிந்து,  மிக்க துயரம் கொண்டு, அவருக்கு  தர்ப்பண  அஞ்சலி செய்தீர்கள். பரதநம்பிக்கு  பாதுகையும் அரசும் தந்து,  அத்ரி முனிவரை வணங்கிவிட்டு மாபெரும்  தண்டகாரண்யம்  புகுந்தீர்கள். அங்கு   பயங்கர உருவம் கொண்ட  விராடன் என்ற  அசுரனை  வதைத்து, சரபங்க முனிவருக்கு  மோக்ஷம் அளித்த்தீர்கள் .

34-7
 முனிவர்கள்  அனைவருக்கும் நன்மையே  செய்ய  விரும்பிய தாங்கள், அவர்களைத் துன்புறுத்தும்  அரக்கர் கூட்டத்தை வதம்  செய்ய பிரதிக்ன்யை செய்தீர்கள். அகஸ்திய முனிவரை  வணங்கி  அவரிடமிருந்து,  வைஷ்ணவ  தனுஷையும் ,பிரம்மாஸ்திரத்தையும் பெற்றுக் கொண்டு, செல்லும் வழியில், தங்கள் தந்தையின் நண்பரான ஜடாயுவைக் கண்டு மகிழ்ந்து , கோதாவரிக் கரையில் பஞ்சவடியில்  மனையாளோடு இன்பமாக  வசித்தீர்கள்.

34-8
 காம வெறியில் தங்களிடம் வந்த சூர்ப்பனகையின் தொந்தரவு  பொறுக்காமல் தாங்கள்  அவளை லக்ஷ்மணனிடம்   அனுப்ப,  அவன்  சினம் கொண்டு அந்த  அரக்கியின் மூக்கை   அறுத்தான். இதனால் கோபம் கொண்ட  கரண்,தூஷணன், த்ரிசிரன் மற்றும் பல்லாயிரம்  அரக்கர்களையும் ஒரே நொடியில் வதம்   செய்தீர்கள் .

34-9
 தனது தங்கை சூர்ப்பனகை கூறிய செய்தியைக் கேட்டு, ராவணன்  கோப ஆவேசம்   அடைந்தான். அவனுடைய  கட்டளைப்படி  ,மாரீசன்  ஒரு  மாய மானாக உரு மாற்றிக் கொண்டு  தங்களிடத்திற்கு  வந்தான். அதைக் கண்டு செந்தாமரை  போன்ற  கண்கள் கொண்ட  சீதாதேவி , அந்த  மானை  பிடிக்க  விரும்பினாள் .ஆகவே  தாங்கள்  அந்த   மானைப் பின்தொடர்ந்து  சென்று  அதைக்  கொன்றீர்கள். அந்த மாரீசனின் வஞ்சகக் குரலைக் கேட்டு,  சீதாதேவி
லக்ஷ்மணனை அனுப்பிய   நேரத்தில், ராவணன் சீதையைக் கவர்ந்து  சென்றான். ராவணனை  வதம் செய்ய   காரணம்  கிடைத்தது.

34-10
  சீதாதேவியை தேடித்   செல்லும்போது,   ஜடாயு தங்களிடம் ' ராவணன் என்    சிறகுகளை வெட்டி , குற்றுயிராக்கி   உனது மனைவியை  கவர்ந்து  சென்றான்  என்று கூறி  உயிர்   இழந்தார். தாங்கள்  ஜடாயுவிற்கு  ஈமச்சடங்குகள்   செய்தீர்கள். வழியில்  கபந்தனைக் கொன்றீர்கள்.

பம்பை  நதிக்கரையில், சபரியைக் கண்டீர்கள். 




பின், அனுமனை அடைந்து பெரிதும் மகிழ்ந்தீர்கள். 
    




  என்னைக்  காத்தருள்க.
=======================================================================
 34-1
The Devas prayed to Thee for the destruction of Raavana. In the kingdom of Kosala, the sage Rishyashringa performed the Putrakaameshti Ynjya on the request of the King Dashratha. From the Yanajya emerged the divine paayasa which the king distributed among his three wives, by eating it they conceived simultaneously. Thou were born to them as Raama, then yourself as Lakshmana ,also as Bharat, and Shatrughna, by these names.  
34-2

At the bidding of Thy father, followed by Lakshmana, Thou proceeded to protect the great sacrifice of Vishwaamitra, carrying the bow Kodanda. To remove the fatigue of the way, the sage imparted two Mantraas -Bala and Atibala. By the order of the sage, for the relief of the men, Thou destroyed the demoness Taadakaa, with arrows. After receiving from the sage instructions in the use of several divine missiles, Thou went to the forest with the sage and then to the hermitage named Siddhaashrama. 


34-3
At the beginning of the sacrificial rites, Thou chased Maareecha and with arrows killed the other Raakshasas. On the way Thou purified Ahilyaa of her sins by the dust of Thy feet. On reaching Janaka's palace and breaking the bow of Shiva, Thou won Seetaa, the daughter of the earth, as Thy consort, who was Lakshmi herself. Along with the three great brothers and their wives Thou set out for Thy kingdom.  

34-4

O Radiant Lord! Parashuraama, the foremost of the Bhrigu clan, confronted Thee with great anger and was defeated. He then transmitted all his powers to Thee and went away. Thou went to Ayodhyaa and lived happily with Thy consort Seetaa. Then one day, when Bharat along with Shatrughna had gone to his uncle's kingdom,Thy father fixed Thy coronation which was obstructed by the daughter of the king Kekaya, i.e., Kekayee.


34-5
To keep Thy father's words Thou proceeded to go to the forest accompanied by Thy consort Seetaa, and brother Lakshmana, armed with a bow. The crowd of citizens stricken with grief, who followed Thee, Thou sent back and on the way went to the residence of Guha. In an ascetic garb of bark cloth and matted hair Thou crossed the Gangaa in a boat and paid obeisance to sage Bharadwaaja who lived near by. On the sage's instruction Thou camped on the great mountain Chitrakoota and lived there very happily.  

34-6

Hearing from Bharat about Thy father's demise on account of the pangs of separation from the son (Thee), Thou were tormented and performed Tarpana for him. Then Thou bestowed Thy sandals and the kingdom to Bharata and paid homage to sage Atri. Going into the dense vast forest Dandaka, Thou killed the ferocious bodied demon Viraadha, and Thou graciously gave salvation to sage Shaarabhangee. 


34-7
After paying obeisance to sage Agastya, Thou the well wisher of the sages, promised to destroy the multitude of demons to the core. Then the sage gave Thee the divine Vaishnava bow and also the Brahmaastra. Thou also met Thy father's friend Jataayu and lived happily with Thy consort Seetaa in Panchawati on the banks of the river Godaavaree.

34-8
Shoorpanakhaa approached Thee overcome with passion. Annoyed by her love lorn advances, Thou sent her away to Lakshmana who in great rage cut off her nose. Khar Dooshana and Trishira seeing her state came to attack Thee in great anger. O Thou! Whose powers know no decline, Thou killed them and other more than ten thousand Raakshasas all at once then and there.

34-9
Raavana's sister Shurpanakhaa gave an account of Seetaa by which he was infatuated and ordered Maareech to become the illusive deer. The lotus eyed Seetaa, made a desire for the deer and Thou went after it and killed it with an arrow. As Maareech died, he gave an illusive cry imitating Raama. Hearing the cry , Seetaa sent away Thy younger brother Lakshmana after him. Finding her alone Raavana abducted Seetaa. Though Thou were grieved at this, Thou also felt some joy as this gave a good reason to kill Raavana.

34-10
While searching for Seetaa, the dying Jataayu informed Thee that Raavana had abducted Seetaa and also had inflicted fatal wounds on him, when offered resistance.Thou performed the funeral rites of this friend Jataayu. On the way the monster Kabandha obstructed Thee and was killed. Thou then gave salvation to the ascetic woman Shabari and also got to meet Hanumaana on the banks of the river Pampaa, to Thy great delight. O Lord of Guruvaayur! protect me.






=====================================================================
34-1
गीर्वाणैरर्थ्यमानो दशमुखनिधनं कोसलेष्वृश्यशृङ्गे
पुत्रीयामिष्टिमिष्ट्वा ददुषि दशरथक्ष्माभृते पायसाग्र्यम् ।
तद्भुक्त्या तत्पुरन्ध्रीष्वपि तिसृषु समं जातगर्भासु जातो
रामस्त्वं लक्ष्मणेन स्वयमथ भरतेनापि शत्रुघ्ननाम्ना ॥१॥


34-2
कोदण्डी कौशिकस्य क्रतुवरमवितुं लक्ष्मणेनानुयातो
यातोऽभूस्तातवाचा मुनिकथितमनुद्वन्द्वशान्ताध्वखेद: ।
नृणां त्राणाय बाणैर्मुनिवचनबलात्ताटकां पाटयित्वा
लब्ध्वास्मादस्त्रजालं मुनिवनमगमो देव सिद्धाश्रमाख्यम् ॥२॥



34-3
मारीचं द्रावयित्वा मखशिरसि शरैरन्यरक्षांसि निघ्नन्
कल्यां कुर्वन्नहल्यां पथि पदरजसा प्राप्य वैदेहगेहम् ।
भिन्दानश्चान्द्रचूडं धनुरवनिसुतामिन्दिरामेव लब्ध्वा
राज्यं प्रातिष्ठथास्त्वं त्रिभिरपि च समं भ्रातृवीरैस्सदारै: ॥३॥



34-4
आरुन्धाने रुषान्धे भृगुकुल तिलके संक्रमय्य स्वतेजो
याते यातोऽस्ययोध्यां सुखमिह निवसन् कान्तया कान्तमूर्ते ।
शत्रुघ्नेनैकदाथो गतवति भरते मातुलस्याधिवासं
तातारब्धोऽभिषेकस्तव किल विहत: केकयाधीशपुत्र्या ॥४॥


34-5
तातोक्त्या यातुकामो वनमनुजवधूसंयुतश्चापधार:
पौरानारुध्य मार्गे गुहनिलयगतस्त्वं जटाचीरधारी।
नावा सन्तीर्य गङ्गामधिपदवि पुनस्तं भरद्वाजमारा-
न्नत्वा तद्वाक्यहेतोरतिसुखमवसश्चित्रकूटे गिरीन्द्रे ॥५॥



34-6
श्रुत्वा पुत्रार्तिखिन्नं खलु भरतमुखात् स्वर्गयातं स्वतातं
तप्तो दत्वाऽम्बु तस्मै निदधिथ भरते पादुकां मेदिनीं च
अत्रिं नत्वाऽथ गत्वा वनमतिविपुलं दण्डकं चण्डकायं
हत्वा दैत्यं विराधं सुगतिमकलयश्चारु भो: शारभङ्गीम् ॥६॥



34-7
नत्वाऽगस्त्यं समस्ताशरनिकरसपत्राकृतिं तापसेभ्य:
प्रत्यश्रौषी: प्रियैषी तदनु च मुनिना वैष्णवे दिव्यचापे ।
ब्रह्मास्त्रे चापि दत्ते पथि पितृसुहृदं वीक्ष्य भूयो जटायुं
मोदात् गोदातटान्ते परिरमसि पुरा पञ्चवट्यां वधूट्या ॥७॥



34-8
प्राप्ताया: शूर्पणख्या मदनचलधृतेरर्थनैर्निस्सहात्मा
तां सौमित्रौ विसृज्य प्रबलतमरुषा तेन निर्लूननासाम् ।
दृष्ट्वैनां रुष्टचित्तं खरमभिपतितं दूषणं च त्रिमूर्धं
व्याहिंसीराशरानप्ययुतसमधिकांस्तत्क्षणादक्षतोष्मा ॥८॥


34-9
सोदर्याप्रोक्तवार्ताविवशदशमुखादिष्टमारीचमाया-
सारङ्ग सारसाक्ष्या स्पृहितमनुगत: प्रावधीर्बाणघातम् ।
तन्मायाक्रन्दनिर्यापितभवदनुजां रावणस्तामहार्षी-
त्तेनार्तोऽपि त्वमन्त: किमपि मुदमधास्तद्वधोपायलाभात् ॥९॥


34-10
भूयस्तन्वीं विचिन्वन्नहृत दशमुखस्त्वद्वधूं मद्वधेने-
त्युक्त्वा याते जटायौ दिवमथ सुहृद: प्रातनो: प्रेतकार्यम् ।
गृह्णानं तं कबन्धं जघनिथ शबरीं प्रेक्ष्य पम्पातटे त्वं
सम्प्राप्तो वातसूनुं भृशमुदितमना: पाहि वातालयेश ॥१०॥         
    






----------------------------------------------------------------------------------



audioplayer