MATHSYA AVATHAARAM- ( NaaraayaNeeyam- episode-32)


longhorn cowfish
The longhorn cowfish (Lactoria cornuta), also called the horned boxfish, is a species of boxfish from the family Ostraciidae, recognizable by its long horns that protrude from the front of its head, rather like those of a cow or bull. They are a resident of the Indo-Pacific region and can grow up to 50 cm (20 in) long.
-------------------------------------------------------------------------
Ragam identification and  mp3  contributed  by Sri.C.Ramakrishnan- 
The  ragam  information  provided  by  him ..( THODI RAGAM)
                                         தோடி  ராகம் 
( the  song  can  be  listened  in the html5  audio  player in this  page
at  the end  of  the  page)
 
please listen using  the  audio  player  at  the end  of  this  page
மத்ஸ்ய  அவதாரம்
                                   தோடி ராகம் 


----------------------------------------------------------------------------------

 -----------------------------------------------------------------------------------------
                                                      மத்ஸ்ய அவதாரம் 

32-1
    புராதன  காலத்தில், பிரமன் சற்று  கண்  அயர்ந்தபோது,  ஹயக்ரீவன் என்ற    அசுரன்,  பிரம்மாவிடம்  இருந்து  வேத  சாஸ்த்ரங்களைக்  கவர்ந்து கொண்டு  ஓடி ஒளிந்து விட்டான்.
32-2
சத்யவ்ரதன்  என்ற  திராமிள (தமிழ் ) மன்னன் ,   தர்ப்பணம் செய்ய  தனது கைகளில் ஆற்று   நீரை அள்ளியபோது,   அதில்  மிக்க ஒளி   பொருந்திய  ஒரு சின்னஞ்சிறு  மீன்குஞ்சு  இருந்தது.   அதை அந்த   ராஜயோகி,  ஆற்றில் மீண்டும்  இட்டான்
32-3
அப்போது  அந்த   விசித்திர  மீன்குஞ்சு அவனிடம்  பேசியது. "   அரசே!  நான் ஒரு   சிறிய மீன்.   என்னை  பெரிய மீன்கள்   விழுங்கி விடும்  என்று  உங்களுக்குத் தெரியாதா? என்னைக் காப்பாற்ற வேண்டாமா ? ' என்று  கெஞ்சியது.   ஆச்சர்யம்  அடைந்த அந்த  மன்னன்,  அனுதாபம்  கொண்டு அந்த   மீனை தனது   கமண்டலத்தில் எடுத்துக் கொண்டு  தனது   ஆஸ்ரமத்திற்குச்   சென்றான். சிறிது   நேரத்தில், அந்த  மீன் குஞ்சு  மீண்டும்   அவனை    அழைத்து, ' ராஜனே!  நீயே  பார்! இந்த  கமண்டலத்தில் எனக்கு  நீந்தக்  கூட   இடமில்லை. சற்று  பெரிய   பாத்திரத்தில் என்னை  விடுவாய்.    என்றது.  அதற்கேற்ப சத்யவ்ரதன்,  அந்த  மீனை  ஒரு   பானையில் இட்டான்.  மீணடும் சிறிது  நேரத்தில்,  அந்த  மீன்   விரைவாக   வளர்ந்து,  அவனைக் கூப்ப்பிட்டு தன்னை  ஒரு  குளத்தில் விடச்  சொல்லி கெஞ்சியது.   அப்படியே செய்தபின்னரும்,   குளம்  முழுவதும்  நிறைந்து பெரிய  உருவம் கொண்டு,  என்னை  ஒரு   ஏரியில் விடுவாய்.  எனக்கு  இங்கு  இடம்    போதவில்லை.  என்றது.  அவ்வண்ணமே  சத்யவ்ரதன்  ஒரு   மாபெரும்  ஏரியில்    இட்டபின்னரும்,
 32-4
அந்த  மீன்   பெரிதாக வளர்ந்து  , என்னை  ஒரு   சமுத்ரத்தில்  கொண்டு  விடு  என்று    கேட்டது. அப்போது  அந்த  விசித்திர    மத்ஸ்யம், '  இன்னும்  சரியாக ஒரு   வாரத்தில்,  ஒரு  மஹாப்ரளயம்   நிகழும். அப்போது  உன்  போன்ற சான்றோர்களைக்  காப்பாற்ற  நான்  இந்த  உருக்    கொண்டுள்ளேன்.   அஞ்சவேண்டாம். என்று   கூறி  மறைந்து   விட்டது.
 32-5
அவ்வாறே  ஒரு  வாரத்தில்,   ஒரு மாபெரும்   புயலும் இடைவிடாத பேய்மழையும்  பெய்து  ,  நிலம் முழுவதும்   நீரில் மூழ்க    நேர்ந்தது. அப்போது,  ஸ்ரீ  ஹரி  ,   கட்டளை விட்டபடி,   நிலம்  ஒரு  பெரிய   கப்பலாக   வந்தது. சத்யவ்ரதனும்,  சப்தரிஷிகளும் அந்த  கப்பலில்   தஞ்சம் அடைத்தனர்
32-6
.   ஆயினும்,  அந்தக் கப்பல்  ,  புயலில் பயங்கரமாகத்   தள்ளாடியபோது,    பல்லாயிரம் காத  நீளம்  கொண்ட   ஒளி  மிகுந்த மாபெரும்   மத்ஸ்யமாக ஸ்ரீ  ஹரி   அங்கு தோன்றி, ' அன்பர்களே!   அஞ்ச வேண்டாம்.   இந்தக்  கப்பலை  எனது  இரண்டு  கொம்புகளில் கட்டிவிடுங்கள்.  நான்  இந்த   பூமியெனும் பெரும் கப்பலை  இழுத்துக் கொண்டு   பாதுகாப்பாக   பயணிப்பேன். என்று    சொல்லி,  
32-7 , 32-8
 சான்றோர்கள்  அனைவருக்கும்,    சமுத்திர விஸ்தாரத்தின்,   பல   பகுதிகளையும்,   காட்டி,   காப்பாற்றினார்.   சத்யவ்ரதன்,  அப்போது,   ஹரியின்  பெருமைகளை  ஸ்தோத்ரம் செய்தான்.
32-9
  பிரளயம்   முடிந்த பின்னர்  மீண்டும்   சத்யவ்ரதனுக்கு   ராஜ்யமும்,  மக்களும்,  ஜீவராசிகளும்    முன்போலவே   கிடைக்கவைத்து, ஸ்ரீ  ஹரி   மறைந்தார்.
32-10
அப்போது   நீண்ட கொம்பினால்,   ஹயக்ரீவனைத்  தாக்கி அவனை  வதம்  செய்து,  வேதங்களை  கைப்பற்றி பாதுகாப்பாக   பிரம்மதேவனிடம் மீண்டும்  ஒப்படைத்தார்

--------------
32-1
 Long ago during the Pralaya which took place at the end of the sixth Manvantara, when Brahmaa was about to sleep, the great Asura Hayagreeva stole the Vedas from his mouth. In order to restore them, Thou decided to incarnate as a fish.

32-2
Sage Satyavrata, the king of Dramila, was doing Tarpana in the waters of the river  In his joined palms, then, Thou appeared as an lustrous indescribable form of a shining tiny fish

32-3
When the royal sage threw Thee in the water, seeing Thee very frightened he took Thee to his home in the kamandalu, the water vessel. In a few days, Thou outgrew the pot, the well, the tank and the lake.  


32-4
Then at Thy command sage Satyavrata took Thee to the ocean by means of his yogic powers. On his expressing a desire to see the Pralaya, Thou asked him to wait for seven days. Then Thou disappeared. 

32-5
When the day mentioned by Thee arrived, the earth was engulfed by incessant downpour of rain. The great sage Satyavrata along with the Saptarshis floundering in the limitless expanse of tremulous waters sought refuge in Thee.  


32-6
Ever obedient to Thee the earth in the form of a boat approached at Thy command which they then boarded. And when they were terrified by the boat's trembling, Thou again appeared in the ocean in the form of a huge fish. 

32-7
The sages were delighted to see Thee of exceeding glory in the form of a fish about a lakh of yojanas in length. At Thy command, they tied the boat to Thy high prominent horns.  


32-8
As Thou pulled the boat, Thou showed the sages the various regions of the world. The great king Satyavrata sang hymns of Thy glory, and Thou moved about bestowing on him the knowledge of the Aatman.


32-9
At the end of the Pralaya, Thou installed the seven sages in their places as before. The king Satyavrata was installed as the Vaivasvata Manu. Then Thou attacked the demon Hayagreeva in great rage.  


32-10
Thou with Thy great horns tore apart the chest of the Asura Hayagreeva and killed him. Then recovering the Vedas, handed them over to the delighted Brahmaa. O Lord of Guruvaayur! Protect me. 
==================================================================

-----------------------------
32-1
पुरा हयग्रीवमहासुरेण षष्ठान्तरान्तोद्यदकाण्डकल्पे ।
निद्रोन्मुखब्रह्ममुखात् हृतेषु वेदेष्वधित्स: किल मत्स्यरूपम् ॥१॥


32-2
सत्यव्रतस्य द्रमिलाधिभर्तुर्नदीजले तर्पयतस्तदानीम् ।
कराञ्जलौ सञ्ज्वलिताकृतिस्त्वमदृश्यथा: कश्चन बालमीन: ॥२॥ 


32-3
क्षिप्तं जले त्वां चकितं विलोक्य निन्येऽम्बुपात्रेण मुनि: स्वगेहम् ।
स्वल्पैरहोभि: कलशीं च कूपं वापीं सरश्चानशिषे विभो त्वम् ॥३॥



32-4
योगप्रभावाद्भवदाज्ञयैव नीतस्ततस्त्वं मुनिना पयोधिम् ।
पृष्टोऽमुना कल्पदिदृक्षुमेनं सप्ताहमास्वेति वदन्नयासी: ॥४॥


32-5
प्राप्ते त्वदुक्तेऽहनि वारिधारापरिप्लुते भूमितले मुनीन्द्र: ।
सप्तर्षिभि: सार्धमपारवारिण्युद्घूर्णमान: शरणं ययौ त्वाम् ॥५॥


32-6
धरां त्वदादेशकरीमवाप्तां नौरूपिणीमारुरुहुस्तदा ते
तत्कम्पकम्प्रेषु च तेषु भूयस्त्वमम्बुधेराविरभूर्महीयान् ॥६॥



32-7
झषाकृतिं योजनलक्षदीर्घां दधानमुच्चैस्तरतेजसं त्वाम् ।
निरीक्ष्य तुष्टा मुनयस्त्वदुक्त्या त्वत्तुङ्गशृङ्गे तरणिं बबन्धु: ॥७॥



32-8
आकृष्टनौको मुनिमण्डलाय प्रदर्शयन् विश्वजगद्विभागान् ।
संस्तूयमानो नृवरेण तेन ज्ञानं परं चोपदिशन्नचारी: ॥८॥



32-9
कल्पावधौ सप्तमुनीन् पुरोवत् प्रस्थाप्य सत्यव्रतभूमिपं तम् ।
वैवस्वताख्यं मनुमादधान: क्रोधाद् हयग्रीवमभिद्रुतोऽभू: ॥९॥



32-10
स्वतुङ्गशृङ्गक्षतवक्षसं तं निपात्य दैत्यं निगमान् गृहीत्वा ।
विरिञ्चये प्रीतहृदे ददान: प्रभञ्जनागारपते प्रपाया: ॥१०॥        

=========================================================