மத்யாமாவதி ராகம்
RAGAM MADHYAMAVATHI
-----------------------------------
RENDITION BY TRISOOR RAMACHANDRAN
mp3 contributed by CRamakrishnan
RAGAM MADHYAMAVATHI
-----------------------------------
RENDITION BY TRISOOR RAMACHANDRAN
mp3 contributed by CRamakrishnan
please listen to the song in the audio player at the end of this page
---------------------------------------------------------------------
ஒளிப்பிழம்பை நான் என் முன் காண்கிறேன். அதனால் நான்
அமிர்த ரஸத்திலே மூழ்கித் திளைக்கிறேன். அவ்வொளிப் பிழம்பின் நடுவில் பிரம்மானந்தானுபவத்தினால் மெய்சிலிர்த்து நிற்கும் நாரதர் முதலிய ரிஷிகளாலும், உபநிடதங்களாகிற பெண்டிர் கூட்டங்களாலும் சூழப்பட்டுள்ள குழவிப் பருவம் முடிந்து யௌவனப் பருவம் ஆரம்பிக்கும் நிலையில் உள்ள அழகுமிக்க தங்கள் ஸ்வரூபத்தைக்காண்கிறேன்
நன்கு கறுத்து விளங்குவதும், சுருள்சுருளான
நுனி கொண்டதும், அடர்ந்து மாசற்று விளங்குவதுமான தங்களது குழற்கற்றை (கூந்தல்) அழகாகச் சுருட்டி மடித்துக் கட்டப்பட்டு, அதில் சூடாமணி அணியப் பெற்றமையால் மேலும் அழகுற விளங்குகிறது. (மேலும்) பற்பல வர்ணங்கள் கொண்ட
மயில் தோகைகளால் சுற்றப்பட்டு, மந்தார புஷ்ப மாலைகளால் அழகுறச் செய்யப்பட்டதாகவும் காண்கிறேன். மேல்நோக்கி இடப்பட்ட வெண்மையான பளபளக்கும் திலகத்துடன் அழகுமிக்க இளஞ்சந்திரன் போன்ற நெற்றித் தடத்தையும் நான் காண்கிறேன்.
அருளே நிறைந்த கருணைக்கடலின் மெதுவான மென்மையான அலைகளால் இங்குமங்கும் அசையச் செய்கின்ற புருவங்களின் அழகால் தங்களது இரு கண்களும் உள்ளத்தைக் கவர்வதாக விளங்குகின்றன. மேலும் நன்கு கறுத்து விளங்கும் இமைகளின் மயிர்களுடன் அழகாகக் காட்சியளிக்கின்றன. அகன்ற சிவந்த தாமரை மலரின் - இதழ் போன்ற நீண்ட கண்களின் அழகிய கருவிழிகளின் கருணைகூர்ந்த பார்வை உலகமனைத்தையும் குளிரச் செய்கின்றன. இவ்வளவு பெருமை
கொண்ட திருக்கண்களின் கடாக்ஷம் அனாதையான, போக்கற்றவனான என்மேல் விழட்டுமே.
(3)
உயர்ந்து விளங்கும் மூக்குடனும், இந்திர நீலமணியால் செய்யப்பட்ட கண்ணாடி போல் - விளங்கும் இரு திருக்கன்னங்களிலும் காதுகளில் அணியப்பட்ட மணி மகர குண்டலங்கள் பிரதிபலிப்பதால் அழகுற விளங்குவதும், ஒளிரும் பல்வரிசைகளோடும். கோவைப் பழம் போல் சிவந்த உதடுகளிடையே அன்பைப் பெருக்கும் புன்னகையும் கொண்டு இனிமையாக விளங்கும் (தங்களது) திருமுகம் என்னெதிரே (என் கண் முன்னே ) நன்றாக விளங்கட்டும்-- 4
-------------
தங்களது
திருக்கரங்கள் ஒளிமிக்க ரத்தினங்கள் இழைத்த கங்கணங்கள் அணிந்தவை. உள்ளங்கைகள் சிவந்த தளிர்போன்று மென்மையானவை. கைவிரல் நகங்களோ ஒளிமிக்கவை. அவற்றால் தடவப்படுவதால் தங்கள் புல்லாங்குழல் பல நிறங்கொண்டதாக விளங்குகிறது. அப்புல்லாங்குழலைத் தாமரை போன்ற தங்கள் திருவாயில் வைத்து இனிமையான ராகங்களைத் தோற்றுவித்து உலகமனைத்தையும் மனங்குளிரச் செய்கின்றீர்கள். அவ்வினிமையான நாதப் பிரம்மமாகிற அமுதத்தால் என் இரு செவிகளையும் நனைத்தருள வேண்டுகிறேன். (5)
-------------
தாங்கள் திருமார்பில் அணிந்துள்ள
கௌஸ்துபம் என்ற மணியிலிருந்து வெளிப்படும் காந்தியால் சிவந்து அழகுற விளங்கும் கழுத்தையும், (பிருகு முனிவருடைய திருவடிச் சின்னமான) ஸ்ரீவத்ஸம் என்ற மருவினாலும், அசைகின்ற முத்து மாலைகளாலும் அழகுற விளங்கும் திருமார்புத்தடத்தையும், அத் திருமார்புத்தடத்தே விளங்கும் பல வண்ணப்பூக்களாலும், தளிர்களாலும் கோக்கப்பட்டு வண்டுகள் வட்டமிடும் வனமாலையையும்,தொங்கும் ரத்தினமாலையையும் தியானம் செய்கிறேன்.
(6)
---------------
தங்களுடைய திருமேனியில் பூசப்பட்டுள்ள பச்சைக் கற்பூரம், கோரோசனம், குங்குமப்பூ, கஸ்தூரி, செஞ்சந்தனம் முதலியன அடங்கிய பஞ்சராகம் என்னும் சந்தனப்பூச்சின் நறுமணம் எங்கும் பரவி உலகினரைக் கவர்கின்றது.
மும்மூன்றான அநேக பிரம்மாண்டங்களைத் தன் திருவயிறகத்தே வெளியே தெரியாது அடக்கிக் கொண்டிருந்தாலும் மெல்லிய கொடிபோல் தங்கள் சிற்றிடை விளங்குகின்றது. இந்திரநீலக்
கல்லில் வைக்கப்பட்ட உருக்கிய தங்கம் போல் மிளிரும் பீதாம்பரம் தங்கள் அரையில் பிரகாசிக்கின்றது. ஒளிமிக்க ரத்தினங்கள் இழைக்கப்பட்டு
கிண்கிணிகள் நிறைந்து விளங்கும் அரைஞாண் இடையிலே விளங்குகிறது. அப்படிப்பட்ட தங்கள் திருமேனியைத் தியானம் செய்கிறேன்.
(7)
-------------
தங்களுடைய இரு துடைகளும் அழகுமிக்கவை. பருத்தவை, பளபளப்பானவை, மனதைக் களவாடுபவை. உலக மக்களை மயக்கிவிடுமே
என்று அஞ்சித்தானே இரண்டு துடைகளையும் மஞ்சள் பட்டாடை உடுத்தி மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தங்களை வணங்குபவர்களுக்கு (தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும்) நான்குவித புருஷார்த்தங்களையும் வழங்குவதற்கென்றே அமைக்கப்பட்ட இரண்டு சிறுபெட்டிகள் போன்று விளங்குகின்றன தங்கள் இரு முழந்தாள்களும். முறையாகச் சீராகத் திரண்டுருண்டு மனதைக் கவர்வன தங்கள் இரு கணுக்கால்களும், அவற்றை நான் சேவிக்கிறேன்.
---------------
தங்களது பாத சேவைதான் உயர்வற உயர்நலத்தை அளிக்கும் சிறந்த ஸாதனம் என்று தனது இனிய ஒலிகளால் கூறுவதுபோல் தங்களது திருவடிக் கழல்கள் ஒலிக்கின்றன. அஞ்ஞானமாகிற பெருங்கடலில்
மூழ்கித் தவிக்கும் பக்தர்களின் மனமாகிற மந்திர மலையைத் தூக்கி நிறுத்தும் கூர்மாவதாரம் போன்றன தங்களது திருவடிகளின் முன் பாகம் (நுனிக்கால்கள் ) உயர்ந்து, கொஞ்சம் சிவந்து காணப்படும் தங்களது திருவடி நகங்கள், சந்திரனின் நிலவு தாபத்தை (வெம்மையைப் போக்குவதுபோல, தம்மை வந்தடைந்த பக்த ஜனங்களின் ஆத்யாத்மிகாதி
தாபத்ரயங்களையும், உள்ளக்கொதிப்பையும், மன இருளையும் அகற்றவல்லன. மங்களங்கள் அளிக்கவல்ல அப்படிப்பட்ட
தங்கள் திருவடிகளின் விரல்களின் வரிசையை இடையறாது தியானம் செய்கிறேன்.
தங்களது திருமேனியிலே யோகிகளான பக்த - ஜனங்களுக்கு மிகமிக இனியது தங்களது திருவடிக்கமலங்களே
முக்தியடைந்தவர்கள் களிக்கும் இடம். பக்தர்களுக்கு வேண்டியன் வாரி வழங்கும் கற்பகத்தருவின் இளந்தளிர் போன்றன. அப்படிப்பட்ட தங்களது திருவடிக் கமலங்கள் எப்பொழுதும் எனது இதயத்தில் வீற்றிருந்து எனது எல்லாத் துன்பங்களையும் போக்கிப் பரமானந்த மோக்ஷ செல்வத்தை அளிக்கட்டும்
.
தங்களுடைய
பெருமைகளை நன்கு அறியாமலேயே - இந்த நூலில் யான் வர்ணித்துள்ளவைகளைத் தாங்கள் பொறுத்தருள வேண்டுகிறேன். ஆயிரத்திற்கும் அதிகமான சுலோகங்களைக் கொண்ட இந்தத் துதி நூல்
படிப்போர்க்கும், கேட்போர்க்கும் தங்களது அருளை அருளுவதாக
ஆகட்டும். வேதங்களிலே பிறந்த இதிஹாஸ புராணங்களில் விளக்கப்படும் திருவிளையாடல்களின் துதிகளால் நன்கு விளங்கும் இந்தத் துதி நூல் ஸ்ரீநாராயணனைப் பற்றியது, நாராயண பட்டதிரி என்பவரால் எழுதப்பட்டது என இரண்டு வகையாலும் நாராயணீயம்' எனப் பெருமையுடையதாக விளங்குகிறது. இந்நூல் இவ்வுலகத்திலுள்ள பக்தர்களுக்கு நிறைந்த ஆயுளையும், ஆரோக்கியத்தையும், சௌக்கியத்தையும் அருளட்டும்.
(11)
-----------------------------------------------------------------------------
अग्रे पश्यामि तेजो निबिडतरकलायावलीलोभनीयं
पीयूषाप्लावितोऽहं तदनु तदुदरे दिव्यकैशोरवेषम् ।
तारुण्यारम्भरम्यं परमसुखरसास्वादरोमाञ्चिताङ्गै-
रावीतं नारदाद्यैर्विलसदुपनिषत्सुन्दरीमण्डलैश्च ॥१॥
In front of me I see a bluish radiance excelling a very thick array of Kalaaya (blue lily) flowers. I am bathed in the nectar of the sight. Then, in the centre of the radiance I see the form of a divine young body enchanting by the budding of youth. He is surrounded by sages like Naarada thrilled with ecstatic bliss, and by a group of beautiful women who are the Upanishads embodied.
--------------------------------------------------------
नीलाभं कुञ्चिताग्रं घनममलतरं संयतं चारुभङ्ग्या
रत्नोत्तंसाभिरामं वलयितमुदयच्चन्द्रकै: पिञ्छजालै: ।
मन्दारस्रङ्निवीतं तव पृथुकबरीभारमालोकयेऽहं
स्निग्धश्वेतोर्ध्वपुण्ड्रामपि च सुललितां फालबालेन्दुवीथीम् ॥२
I see Thy luxuriant locks of hair dark and curly, thick and very clean, held together in a very beautiful manner, bejewelled and very beautifully tied with a plume of peacock feathers having glistening eyes, encircled by a garland of mandaar flowers. I also see Thy broad smooth forehead with its soft white upright sandal paste mark, like a young moon's line.
---------------------------------------------------------
हृद्यं पूर्णानुकम्पार्णवमृदुलहरीचञ्चलभ्रूविलासै-
रानीलस्निग्धपक्ष्मावलिपरिलसितं नेत्रयुग्मं विभो ते ।
सान्द्रच्छायं विशालारुणकमलदलाकारमामुग्धतारं
कारुण्यालोकलीलाशिशिरितभुवनं क्षिप्यतां मय्यनाथे ॥३॥
O All pervading Lord! Do cast on me, the forsaken one, the glances of Thy pair of eyes which are attractive with brows that are tremulous like gentle waves in the ocean of compassion. Thy eyes which are very lustrous and have rows of beautiful bluish eyelashes. They are shaped like big red lotus petals and have very beautiful pupils. Thy glances cool the worlds.
------------------------------------------------------------------
उत्तुङ्गोल्लासिनासं हरिमणिमुकुरप्रोल्लसद्गण्डपाली-
व्यालोलत्कर्णपाशाञ्चितमकरमणीकुण्डलद्वन्द्वदीप्रम् ।
उन्मीलद्दन्तपङ्क्तिस्फुरदरुणतरच्छायबिम्बाधरान्त:-
प्रीतिप्रस्यन्दिमन्दस्मितमधुरतरं वक्त्रमुद्भासतां मे ॥४॥
Thy face is beautiful with a prominent and well shaped nose, Thy cheek area, like an emerald mirror reflects the pair of fish shaped gem studded earrings dangling from the ears, are resplendent. Thy quivering ruby red lips like the bimba fruit, slightly parted reveal Thy beautiful row of teeth, and the very sweet gentle smile over flows with love. O Lord! may that Thy face clearly shine unto me.
--------------------------------------------------------------------
बाहुद्वन्द्वेन रत्नोज्ज्वलवलयभृता शोणपाणिप्रवाले-
नोपात्तां वेणुनाली प्रसृतनखमयूखाङ्गुलीसङ्गशाराम् ।
कृत्वा वक्त्रारविन्दे सुमधुरविकसद्रागमुद्भाव्यमानै:
शब्दब्रह्मामृतैस्त्वं शिशिरितभुवनै: सिञ्च मे कर्णवीथीम् ॥५॥
Deign to soak my ear passages, with the extremely sweet melodies which cool all the worlds and which are Brahman Itself in the form of sound, which flows out of Thy flute which is placed on Thy lotus mouth. The flute is multi colored by the contact with the finger nails' rays spreading out, the two hands wearing studded shining bangles and red as coral, holding it.
----------------------------------------------------------------------
उत्सर्पत्कौस्तुभश्रीततिभिररुणितं कोमलं कण्ठदेशं
वक्ष: श्रीवत्सरम्यं तरलतरसमुद्दीप्रहारप्रतानम् ।
नानावर्णप्रसूनावलिकिसलयिनीं वन्यमालां विलोल-
ल्लोलम्बां लम्बमानामुरसि तव तथा भावये रत्नमालाम् ॥६॥
I meditate on Thy handsome neck rendered red by the lustrous rays emitting from the Kaustubh jewel, Thy chest beautified with the Shreevatsa mark, tremulous and brilliant many pearl and gem necklaces and garlands made from rows of wild multi colored flowers, with bees hovering on them, spread on Thy chest.
---------------------------------------------------------------------------
अङ्गे पञ्चाङ्गरागैरतिशयविकसत्सौरभाकृष्टलोकं
लीनानेकत्रिलोकीविततिमपि कृशां बिभ्रतं मध्यवल्लीम् ।
शक्राश्मन्यस्ततप्तोज्ज्वलकनकनिभं पीतचेलं दधानं
ध्यायामो दीप्तरश्मिस्फुटमणिरशनाकिङ्किणीमण्डितं त्वां ॥७॥
We meditate on Thee, the unguents of five ingredients smeared on whose body attracts the whole world by the spreading of its fragrance. We meditate on Thee whose midriff waist is slender and creeper like, even though it holds all the three worlds within. We meditate on Thee whose body is like a rock of sapphire, and is adorned by a yellow silk cloth which is shining like molten gold and wearing a girdle made of studded gems and with minibells on it, emitting brilliant rays.
---------------------------------------------------
ऊरू चारू तवोरू घनमसृणरुचौ चित्तचोरौ रमाया:
विश्वक्षोभं विशङ्क्य ध्रुवमनिशमुभौ पीतचेलावृताङ्गौ ।
आनम्राणां पुरस्तान्न्यसनधृतसमस्तार्थपालीसमुद्ग-
च्छायं जानुद्वयं च क्रमपृथुलमनोज्ञे च जङ्घे निषेवे ॥८॥
I meditate on Thy two handsome thighs, which are solid soft and charming, stealing Ramaa's heart. Fearing to excite the whole world, definitely, they are always covered with yellow silk cloth. Thy two knees, are like two caskets holding all the desired objects for Thy devotees, and Thy two forelegs are beautifully tapered and fleshy.
--------------------------------------------------------
मञ्जीरं मञ्जुनादैरिव पदभजनं श्रेय इत्यालपन्तं
पादाग्रं भ्रान्तिमज्जत्प्रणतजनमनोमन्दरोद्धारकूर्मम् ।
उत्तुङ्गाताम्रराजन्नखरहिमकरज्योत्स्नया चाऽश्रितानां
सन्तापध्वान्तहन्त्रीं ततिमनुकलये मङ्गलामङ्गुलीनाम् ॥९॥
I meditate on Thy anklets with their sweet sound, which, as it were, sweetly confirm the excellence of worshipping at Thy feet. Thy incarnation of the tortoise which lifted up the Mandaar mountain at the time of the deluge, Thy forefeet lift up the minds of the people who prostrate at Thy feet. Thy toe nails, of Thy auspicious toes, slightly raised, very red and shining are like the moon light expelling the darkness of the sorrows of Thy devotees. I meditate on them.
--------------------------------------------------------------
योगीन्द्राणां त्वदङ्गेष्वधिकसुमधुरं मुक्तिभाजां निवासो
भक्तानां कामवर्षद्युतरुकिसलयं नाथ ते पादमूलम् ।
नित्यं चित्तस्थितं मे पवनपुरपते कृष्ण कारुण्यसिन्धो
हृत्वा निश्शेषतापान् प्रदिशतु परमानन्दसन्दोहलक्ष्मीम् ॥१०॥
O Lord! Among the parts of Thy body, the soles of Thy feet are the most beloved and coveted to the great yogis. The liberated ones reside there. They pour all the desires of their devotees, and are like the sprouts of the celestial tree. O Lord of Guruvaayur! O Lord Krishna! may those feet always rest in my heart. O Ocean of Compassion! destroy all my sorrows and confer a full abundant flow of Supreme Bliss.
------------------------------------------------------------------------
अज्ञात्वा ते महत्वं यदिह निगदितं विश्वनाथ क्षमेथा:
स्तोत्रं चैतत्सहस्रोत्तरमधिकतरं त्वत्प्रसादाय भूयात् ।
द्वेधा नारायणीयं श्रुतिषु च जनुषा स्तुत्यतावर्णनेन
स्फीतं लीलावतारैरिदमिह कुरुतामायुरारोग्यसौख्यम् ॥११॥
O Lord of the Universe! Deign to pardon me for what I have said here, not knowing fully Thy greatness. This hymn consists of more than a thousand verses. May it be the source of Thy abounding grace. It is in two ways Naaraayaneeyam. May this hymn which describes in accordance with the Vedas, Thy creative actions and Thy sportive incarnations, confer long life, good health and happiness.
--------------------------------------------------------------------
॥ ऊँ नमो भगवते वासुदेवाय ॥
rkg DASAKAM_100 --> 1m2IJeo02CGAyMh7jGAG-PI0cppG_tPi_
audioplayer